ஞாயிறு, கதிரவன் அல்லது சூரியன் (Sun) என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள விண்மீன் ஆகும்.

இது கிட்டத்தட்ட கோள வடிவில் இருக்கும் சூடான பிளாஸ்மா ஆகும்.

இதன் உட்புற வெப்பச்சலன இயக்கமானது இயக்கவியல் செயல்முறை மூலம் காந்தப்புலத்தை உருவாக்குகிறது.

புவியில் உயிர்கள் வாழ்வதற்கான ஆற்றல் மூலமாகக் கதிரவன் விளங்கி வருகிறது.

புவியை விட 109 மடங்கு பெரியதாக உள்ள கதிரவனின் விட்டம் சுமார் 1.39 மில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும்.

இதன் நிறை புவியை விட 330,000 மடங்கு அதிகமானதாகும்.

இது கதிரவ அமைப்பின் மொத்த நிறையில் தோராயமாக 99.86 விழுக்காட்டினைக் கொண்டுள்ளது.

சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5,778 K ஆகும்.

கதிரவ நிறையில் மூன்றில் ஒரு பங்கு ஹைட்ரஜனும் (~73%) மீதமுள்ள பங்கில் பெருமளவு ஹீலியமும் (~25%) உள்ளன.

அவற்றுடன் சிறிய அளவில் ஆக்சிஜன், கரிமம், இரும்பு மற்றும் நியான் உள்ளிட்ட கனமான தனிமங்களும் உள்ளன.

சூரியனின் வெப்பநிலை – 27 மில்லியன் டிகிரி செல்சியஸ் (48.6 மில்லியன் °F)

சூரியனில் ஒவ்வொரு வினாடியும் சுமார் 620 மில்லியன் மெட்ரிக் டன் எடை அளவு ஹைட்ரஜன் அணுக்கரு இணைவு நடந்து, சுமார் 616 மில்லியன் மெட்ரிக் டன் ஹீலியம் உருவாகிறது.

இதில் சுமார் 4 மில்லியன் மெட்ரிக் டன் எடை அளவுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் ஆற்றலாக மாற்றப்படுகிறது.

நிறமாலை வகைப்பாட்டின் அடிப்படையில் ஞாயிறு என்பது ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீன் (G2V) ஆகும்.

எனவே இது மஞ்சள் குறுமீன் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆனால் அதன் ஒளி மஞ்சளை விட வெள்ளை நிறத்திற்கே நெருக்கமானதாகும்.

சுமார் 4.568 பில்லியன்[nb 1] ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய மூலக்கூறு மேகத்தின் ஒரு பகுதியின் உள்ளே இருந்த பருப்பொருளின் ஈர்ப்புவிசைச் சுருக்கத்தில் இருந்து ஒரு பருப்பொருள் உருவானது.

அதன் பெரும்பகுதி, மையப் பகுதியில் ஒன்றுசேர்ந்து கதிரவனாக உருவெடுத்தது.

மீதமிருந்த பகுதிகள் சுற்றுப்பாதை வட்டுக்களாகத் தட்டையடைந்து கதிரவ அமைப்பாக உருமாறின. கதிரவனின் மையப்பகுதி மிகுந்த வெப்பமும் அடர்த்தியும் கொண்டதாக மாறி, அதன் உள்ளகத்தில் அணுக்கரு இணைவைத் தொடக்கியது.

பெரும்பாலும் அனைத்து விண்மீன்களும் மேற்கண்ட நிகழ்வின் மூலமே உருவானதாகக் கருதப்படுகிறது.

தற்போது கதிரவன் கிட்டத்தட்ட தனது நடுத்தர வயதில் இருக்கிறது; நான்கு பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் கழிந்த பிறகும் வியத்தகு முறையில் மாற்றமடையாது இருப்பதுடன், இன்னும் ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மிகவும் நிலைத்தன்மையுடன் இருக்கும்.

தற்போது வினாடிக்கு சுமார் 600 மில்லியன் டன்கள் ஐட்ரசனை இணைத்து ஈலியமாக மாற்றி வருவதன் மூவம் வினாடிக்கு 4 மில்லியன் டன்கள் கொண்ட பருப்பொருளை ஆற்றலாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

கதிரவனின் ஒளி மற்றும் வெப்பத்திற்கு மூலமாக உள்ள இந்த ஆற்றல், கதிரவ உள்ளகத்தில் இருந்து விடுபட 10,000 முதல் 170,000 ஆண்டுகள் வரை எடுக்கும்.

தோராயமாக 5 பில்லியன் ஆண்டுகளுக்குள் கதிரவ உள்ளகத்தில் நிகழும் ஹைட்ரஜன் இணைவு குறைந்து, நீர்நிலைச் சமநிலையற்ற நிலைக்கு கதிரவன் வந்துவிடும்.

இதனால் கதிரவ மையத்தின் அளவும் வெப்பமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். அதேநேரம் அதன் வெளிப்புற அடுக்குகள் விரிவடைந்து இறுதியில் ஒரு செம்பெருமீனாக மாற்றமடையும்.

அதன் அளவு தற்போது உள்ள புதன் மற்றும் வெள்ளியின் சுற்றுப்பாதையை விழுங்கிவிடுகின்ற அளவிற்கு பெரியதாக இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

எனவே அப்போது புவி வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும்.

அதன்பிறகு கதிரவன் தனது வெளி அடுக்குகளை இழந்து வெண் குறுமீன் எனப்படும் அடர்த்தியான குளிரும் விண்மீனாக மாற்றமடையும்.

இனி கதிரவனால் இணைப்பின் மூலம் ஆற்றலை உற்பத்தி செய்ய இயலாது.

எனினும் அது ஒளிர்வுடனும் முந்தைய இணைப்புகளில் இருந்து கிடைத்த வெப்பத்தை வெளியிட்டுக் கொண்டும் இருக்கும்.

சூரியக் கதிர்வீச்சு புவியை வந்தடைய சராசரயாக எடுத்துக்கொள்ளும் நேரம் 8 நிமிடம் 20 விநாடிகள் ஆகும்.

சூரியனில் ஏற்படும் அணுக்கரு இணைவால் ஒவ்வொரு விநாடியம் 4 மில்லியன் டன் நிறையை இழக்கிறது. இருப்பினும், சூரியன் தனது மொத்த நிறையையும் இழக்க மேலும் 5 பில்லியன் வருடங்கள் ஆகும்.

2022, ஜனவரி, 08 – சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர், அது சுமார் 7 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது, இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். இந்த செயற்கை சூரியனானது சுமார் 17 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஒளி வீசி சாதனை படைத்தது.