1639ல் பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர் சென்னையை நிறுவி அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்தார்.
1644 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23 ஆம் தேதி, புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் கட்டப்பட்டது.
1688 – ஆம் ஆண்டு, சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
1829 – ஆம் ஆண்டு, அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் சென்னையில் துவங்கப்பட்டது
1852 ஆம் ஆண்டு, சென்னை வாசிகள் சங்கம் துவங்கப்பட்டது.
1854, மே, 20 – அன்று, அயோத்திதாசர் சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் காத்தவராயன் என்பதாகும்.
1857 – ஆம் ஆண்டு, சென்னையில், சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
1869 – ஆம் ஆண்டு, சென்னையில் கண்ணிமார் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.
1877 ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதி மன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக முத்துசாமி அய்யர் நியமிக்கப்பட்டார்.
1884 ஆம் ஆண்டு, சென்னை மகாஜன சபை தொடங்கப்பட்டது.
1887, டிசம்பர் 27 – ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது.
1907 – ஆம் ஆண்டு, சென்னை பல்கலைக்கழக நூலகம் உருவாக்கப்பட்டது.
1920, ஆம் ஆண்டு, முதன் முதலாக மகாத்மா காந்தி அவர்கள் சென்னைக்கு வந்தார்.
1925 ஆம் ஆண்டு, சென்னையில் பேருந்து போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டது.
1929 ஆம் ஆண்டு, மே, 18 ஆம் நாள், உலகளாவிய புகழ்பெற்ற வின்வெளி அறிவியலாளர் வெ.இராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் பிறந்தார்.
1930 – ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் முதல் வானொளி நிலையம், சென்னையில் தொடங்கப்பட்டது.
1936, ஜனவரி, 06 – அன்று, காலஷேத்ரா சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.
1942 ஆம் ஆண்டு, உ.வே.சா நூல்நிலையம் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் துவங்கப்பட்டது.
1947 – ஆம் ஆண்டு, டாக்டர் உ.வே.சா நூலகம் சென்னையில் துவங்கப்பட்டது.
1954 – காமராசர் அவர்கள் அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார்.
1956, நவம்பர், 1 – அன்று, இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது, லட்சத்தீவுகள் சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து, நிர்வாக நோக்கங்களுக்காக ஒரு தனியான யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது.
1957 – ஆம் ஆண்டு சென்னையில் உள்ள கிண்டி தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது.
1958 – ஆம் ஆண்டு, சென்னையில் மறைமலை அடிகளார் நூலகம் துவங்கப்பட்டது.
1968 – இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு – சென்னை.
1970 – ஆம் ஆண்டு, சென்னையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.
1976 – ஆம் ஆண்டு கிண்டி தேசிய பூங்கா நிறுவப்பட்டது.
1978 – ஆம் ஆண்டு, சென்னையில், அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
1991, மே, 21 அன்று சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
1997 – ஆம் ஆண்டு, சென்னையில், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
2019 – ஆம் ஆண்டு, ஆவடி நகராட்சி, மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
2020, ஆகஸ்டு, 10 அன்று, சென்னையிலிருந்து அந்தமான் நிகோபார் தீவுகளை இணைக்கும் Fiber Optic Cable சேவை பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்டது.
2022, ஆகஸ்ட், 02 – ஶ்ரீபெரும்புத்தூருக்கு அருகிலுள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு.
2022, செப்டம்பர், 21 – சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும், பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான மீனா கந்தசாமிக்கு ஜெர்மன் நாட்டின் “PEN” அமைப்பின் உயரிய விருதான ‘ஹெர்மன் கெஸ்டன்’ விருது அறிவிக்கப்பட்டது. அடக்குமுறைக்கு ஆளாகும் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களின் உரிமைக்காகப் போராடும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர்.ராஜா முத்தையா செட்டியார்.
முதல் உலகப்போரின் போது தாக்குதலுக்கு ஆளாகிய ஒரே இந்திய நகரம் சென்னை ஆகும்.
சென்னை, லண்டனை அடுத்து உலகிலேயே இரண்டாவது பழமையான மாநகராட்சி ஆகும்.
தமிழ்நாட்டின் முதல் மகளிர் காவல் நிலையம் ஆயிரம் விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், 22 ஆம் நாள் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.
உலகின் இரண்டாவது மிக நீண்ட கடற்கரை சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை ஆகும்.
இந்தியா வந்த அன்னி பெசண்ட் சென்னையில் அடையாற்றில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார்.
கிண்டியில் பாம்புப் பண்னை அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை ஆகும்.
உ.வே.சா நூல் நிலையம் சென்னையிலுள்ள பெசண்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்களாவன – கீழ்த்திசை சுவடிகள் நூலகம், சென்னை மற்றும் அரசு ஆவண காப்பகம், சென்னன மற்றும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
தென்னிந்தியாவின் நூழைவு வாயில் என்று சென்னை அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் கலாச்சார நகரம் என்று சென்னை அழைக்க்ப்படுகிறது
இந்தியாவின் டெட்ராய்ட் நகரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் – சென்னை மொஃபுசில் பஸ் டெர்மினல்
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து