செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வரும் அரிய வானியல் நிகழ்வு அக்டோபர், 9, 2020 அனுறு ஏற்படுகிறது.
சூரியனை சுற்றி வரும் பயணத்தில், செவ்வாய் கிரகம் அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை இன்று அடைகிறது.
அதன்படி, இரண்டுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர் ஆக இருக்கும்.
இந்திய நேரப்படி, அக்டோபர், 9, 2020, இரவு 7.47 மணிக்கு இந்த வானியல் நிகழ்வு ஏற்படுகிறது. அதன்பிறகு, 2035ல் தான் இந்த இந்த நிகழ்வு உருவாகும்.
இதனிடையே, ஆண்டு இறுதி வரை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வெறும் கண்களால், வானில் செவ்வாய் கிரகத்தை காணலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.