கி.பி.முதலாம் நூற்றாண்டு – டாலமி காலகட்டத்தில் நாஞ்சில் நாடானது சேரா்களுக்கும் பாண்டியா்களுக்கும் இடையே ஒரு தாங்கலாக இருந்தது.

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரைச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள்.

சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம்.

மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர்.

சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

அந்நாடு அக்காலத் தமிழகத்தின் மேற்குக் கரைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.

பெரும்பாலும் இன்றைய தமிழகத்தின் கொங்கு நாட்டுப்பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம்.

பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின.

மேலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டி நாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான்.

தலைநகர் கரூர் வஞ்சி.

இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூரும்.

மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

சேரர்கள் வரலாற்றைக் கூறும் சங்ககால நூல் பதிற்றுப்பத்து ஆகும்.




சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)