காஷ்மீர் வரலாற்றில் பரந்த இந்தியத் துணைக்கண்ட வரலாறும் இதைச்சுற்றிய பகுதிகளான, நடு ஆசியா, தெற்கு ஆசியா , கிழக்காசியா போன்ற பகுதிகளின் வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளன.

இன்று, இது இந்தியாவால் நிர்வகிக்கப்படும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை உள்ளடக்கிய பெரிய பகுதி (ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, மற்றும் லடாக் ஆகியவை சேர்த்து), பாக்கித்தானால் நிர்வகிக்கப்படும் பகுதியான ஆசாத் காஷ்மீர், கில்ஜித்-பால்திஸ்தான், சீனாவால் நிர்வகிக்கப்படும் பகுதியான அக்சாய் சின், டிரான்ஸ் காரகோரம் பகுதி ஆகியவற்றைக் குறிக்கிறது.

முதல் புத்தாயிரத்தின் முதல் பாதியில், காஷ்மீர் பிராந்தியம் இந்து சமயத்தின் ஒரு முதன்மையான மையமாக விளங்கியது. பின்னர் பௌத்த மையமாகவும் பின்வந்த ஒன்பதாம் நூற்றாண்டில் சைவமும் எழுச்சியுற்றது.

காஷ்மீர் 13 ஆம் நூற்றாடிலிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இசுலாமிய மயமானது. இதனால் இறுதியில் காசுமீர சைவம் வீழ்ச்சியுற்றது. இருப்பினும், பிராந்தியம் தன் நாகரிகத்தின் சாதனைகளை இழக்காமல் இருந்தது, ஆனால் புதிய இசுலாம் ஆட்சி அமைப்பும் கலாச்சாரத்தாலும் உறிஞ்சப்பட்டு காஷ்மீர் சூஃபி மிஸ்டிசிம் பெரியளவுக்கு எழுச்சியடைந்தது.

1339 இல், ஷா மிர், காஷ்மீரின் முதல் முஸ்லீம் அரசராக ஆனார், இவரால் ஷா மிர் வம்சம் துவக்கப்பட்டது.

அடுத்து வந்த ஐந்து நூற்றாண்டுகளும், முகலாயர் உள்ளிட்ட முஸ்லீம் முடியாட்சிகள் காஷ்மீரை ஆண்டனர், இவர்கள் 1586 முதல் 1751வரையும் , 1747 முதல் 1819 வரை ஆப்கான் துரானி சாம்ராஜ்யத்தாலும் ஆளப்பட்டது.

அந்த ஆண்டு, ரஞ்சித் சிங் தலைமையிலான சீக்கியர்களால் காஷ்மீர் கைப்பற்றப்பட்டது.

1846 இல் நடந்த முதலாம் ஆங்கிலேய சீக்கியப் போரின் முடிவில் சீக்கியரின் தோல்விக்குப்பின், ஏற்பட்ட அமிர்தசரஸ் உடன்படிக்கையின் கீழ் பிரிட்டிஷாரிடமிருந்து 75 இலட்சம் ரூபாய்க்கு காஷ்மீர், வடக்கு நிலங்கள் மற்றும் லடாக் பகுதியை ஜம்மு அரசர் குலாப் சிங் வாங்கினார். குலாப் சிங் புதிய ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் முதல் ஆட்சியாளர் ஆனார்.

2019, அக்டோபர், 31 – அன்று, ஜம்மு – காஷ்மீர் மாநிலமானது, யூனியன் பிரதேசமாக இந்திய அரசால் மாற்றப்பட்டது.

2021, நவம்பர், 13 – அன்று, ஆசியாவின் முதல் மிதக்கும் திரையரங்கம், காஷ்மீரிலுள்ள தால் ஏரியில் திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டது.

2022, மே, 10 – சிறந்த ஆவண புகைப்படம் 2022 க்கான புலிட்சர் விருதை பெற்றார் காஷ்மீரைச் சேர்ந்த புகைப்பட பத்திரிக்கையாளர் – சனா இர்ஷத் மட்டோ.