2000, நவம்பர், 15 – அன்று, பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது.
1907 – ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஜாம்ஷெட்பூரில் டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். ஜாம்ஷெட்பூர் (பெரிய நகரம்), பொகாரோ மற்ற முக்கிய நகரங்கள்.
ஜார்க்கண்டின் அருகில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
ஜார்க்கண்ட கனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.
இந்தியாவின் இரும்பு உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலம் ஆகும்.
இந்தியாவின் முதல் தொழில் நகரம் ஜாம்ஷெட்பூர் ஆகும், இந்நகரம், இந்தியாவின் பிட்ஸ்பர்க் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரியி உரத்தொழிற்சாலை இம்மாநிலத்திலுள்ளி சிந்திரி ஆகும்.
இம்மாநிலத்தில் இரும்புத்தாது அதிக அளவில் காணப்படுகிறது.
இந்தியாவின் முதல் இரும்பு மற்றும் எஃகு ஆலை இம்மாநிலத்திலுள்ள ஜார்ஷெட்பூரில் அமைக்கப்பட்டது.
இது ஆதிவாசிகளின் பூமி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே நிலக்கரி அதிகம் வெட்டி எடுக்கப்படும் மாநிலமாகும்.
இம்மாநிலம் காடுகளின் நிலம் என்றும் அழைக்கப்படுகிறது.