ஜெர்மனி1818 ஆம் ஆண்டு, மே, 5 அன்று, கார்ல் மார்க்ஸ், ஜெர்மனியில் பிறந்தார்.

1888 ஆம் ஆண்டு, ஜெர்மனி இயற்பியலாளர், ஹென்றி ஹெர்ட்ஸ் முதலாவது பரவளைய ஆடியை எதிரொளிக்கும் வானிலை வாங்கி (Antena) வடிவில் வடிவமைத்தார்.

1917 ஆம் ஆண்டு ரஷ்யா ஜெர்மனியுடன் பிரெஸ்ட்லி டோஸ்க் உடன்படிக்கை செய்துகொண்டது.

1937 ஆம் ஆண்டு இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ரோம் – பெர்லின் – டோக்கியோ ஆச்சு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. இது இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது.

1939 ஆம் ஆண்டு, ஹிட்லர், ஜெர்மனியையும், கிழக்கு பிரஷ்யாவையையும் போலந்து வழியாக இராணுவச்சாலை அமைக்கும் உரிமையை வழங்குமாறு போலந்து நாட்டை நிர்பந்தித்தார் மற்றும் டான்சிக் (Danzig) துறைமுகத்தை தன்னிடம் ஒப்படைக்கவும் வலியுறுத்தினார். இதனை போலந்து மறுக்கவே 1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி ஹிட்லர் அந்நாட்டின் மீது மின்னல் வேக தாக்குதல் நடத்தி போலந்தை கைப்பற்றினார். இதுவே இரண்டாம் உலகப் போர் ஏற்பட உடனடி காரணமாக அமைந்தது.

1939 செப்டெம்பரில், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், ஜெர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோலோட்டோவ்ரிப்பென்ட்ராப் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு நாடுகளும் போலந்தைத் தமக்குள் பங்கு போட்டு ஆக்கிரமித்துக் கொண்டன.

2022, செப்டம்பர், 21 – சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும், பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான மீனா கந்தசாமிக்கு ஜெர்மன் நாட்டின் “PEN” அமைப்பின் உயரிய விருதான ‘ஹெர்மன் கெஸ்டன்’ விருது அறிவிக்கப்பட்டது. அடக்குமுறைக்கு ஆளாகும் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களின் உரிமைக்காகப் போராடும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.


முதல் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைந்தது.

அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889– ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கினார். 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார்.

செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இரண்டாம் உலகப்போர் துவங்கியதாகப் பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜான் கூட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.