இந்தியாவின் தலைநகரான டெல்லி பற்றிய சில நிகழ்கால மற்றும் வரலாற்றுக் கால முக்கிய தகவல்கள்
1266 ஆம் ஆண்டு முதல் 1287 ஆம் ஆண்டு இறக்கும் வரை கியாசுத்தீன் பல்பான் டில்லி சுல்தானாக ஆட்சியில் இருந்தார்.
1858 ஆம் ஆண்டு, கானிங் பிரபு ஆளுநராக இருந்தபொழுது, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.
1927, மார்ச், 20 – அன்று டெல்லியில் முஸ்லீம்களின் மாநாடு நடைபெற்றது.
1931, பிப்ரவரி, 10 – புதுடெல்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.
1948 – ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி அவர்கள், புதுடெல்லியில் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
1991 ஆம் ஆண்டு, டெல்லி இந்தியாவின் தேசிய தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
2022, ஜூலை, 12 – டெல்லியில் புதிய நாடாளுமற்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் வைக்கப்பட்ட அரசின் தேசியச் சின்னம் திறக்கப்பட்டது.
இந்தியாவின் தலைநகரம் டில்லி ஆகும்.
உத்யோக் பவனில், கைத்தறி வளர்ச்சி ஆணையம் அலுவலகத்தின் தலைமையிடம் அமைந்துள்ளது.
இந்திய குடியரசுத் தலைவரின் இல்லம் – ராஷ்டிரபதி பவன் அகும். 1911இல் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு இந்தியத் தலைநகரத்தை நகர்த்தவேண்டும் என்று பிரித்தானிய அரசு தீர்மானம் செய்ததில், இந்தியத் தலைமை ஆளுநருக்கு புதிய வாழிடம் தேவையானது. இதனால் குடியரசுத் தலைர் இல்லம் உருவாக்கப்பட்டது. செந்நெறிக்காலக் கட்டிடக்கலையில் பிரித்தானிய கட்டிடக்கலைஞர் எட்வின் லுட்யென்ஸ் வடிவமைப்பில், 1929இல் திறக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸில் உள்ள எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில் பிளாட்டினம் – இரிடியம் உலோகக் கலவையிலான ஒரு படித்தார மீட்டர்கம்பி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த மீட்டர் கம்பியின் நகல் ஒன்று டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு புது டெல்லியில் அமைந்துள்ளது.