டென்மார்க் (Denmark, Kingdom of Denmark) என்பது டென்மார்க், பரோயே தீவுகள் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இராச்சியம் ஆகும்.
இது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் ஆகும்.
நார்டிக் நாடுகளில் தென்கோடியில் அமைந்துள்ளது இதுவே. இதன் தெற்கில் ஜெர்மனி, இதன் எல்லையாக உள்ளது.
இதன் வடகிழக்குப் பகுதியில் ஸ்காண்டிநேவிய நாடுகளான நார்வே, ஸ்வீடன் என்பன அமைந்துள்ளன.
இது பால்டிக் கடல் மற்றும் வடக்கு கடலுக்கு இடையில் அமைந்துள்ளது.
டென்மார்க்கின் பரப்பளவு 43,094 சதுர கிலோமீட்டர்கள் (16,638.69 sq mi) ஆகும்.
டென்மார்க் நாடானது தீபகற்பம், ஜிட்லாந்து மற்றும் 407 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிக் காணப்படுகின்றது. ஆனாலும் மக்கள் 70 தீவுகளிலேயே வசித்து வருகின்றனர்.
டென்மார்க் 1973ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் (முன்னதாக ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது.
நேட்டோ அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும்.
பால்டிக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.
வருவாய் ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும்.
2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும்.
இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கைத்தரம், சுகாதாரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது.
ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது.
டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது.
இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது.
90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர்.
இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவர்.

