2022, ஜூலை, 13 – பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதாவை தாய்லாந்து செனட் நிறைவேற்றியது. இந்த மசோதா 145 செனட்டர்களின் ஆதரவைப் பெற்றது. 2013 மற்றும் 2020 க்கு இடையில் தாய்லாந்து சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 16, ஆயிரம் பாலியல் குற்றவாளிகளில் 4,848 பேர் மீண்டும் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குறுகிய சிறை காலத்திற்கு பிறகு மீண்டும் குற்றமிழைக்கும் நிலையில் இந்த மசோதாவின் கீழ் அவர்கள் ரசாயன ஊசிகளைப் பெறலாம். தற்போது, ​​போலந்து, தென் கொரியா, ரஷ்யா, எஸ்டோனியா மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் மட்டுமே கெமிக்கல் காஸ்ட்ரேஷன் பயன்பாடு சட்டப்பூர்வமாக உள்ளது.

தாய்லாந்து (Thailand), அதிகாரப்பூர்வமாக தாய்லாந்து இராச்சியம் (Kingdom of Thailand), முன்னர் சயாம் (Siam), என அழைக்கப்படும் நாடு; தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு.

இதன் எல்லைகளாக மியான்மர், லாவோஸ் ஆகியன வடக்கேயும், லாவோஸ், கம்போடியா ஆகியன கிழக்கேயும், தாய்லாந்து வளைகுடா, மலேசியா ஆகியன தெற்கேயும், அந்தமான் கடல் மேற்கேயும் அமைந்துள்ளன.

தாய்லாந்தின் கடல் எல்லைகளாக தென்கிழக்கே தாய்லாந்து வளைகுடாவில் வியட்நாமும், தென்மேற்கே அந்தமான் கடலில் இந்தோனேசியா, இந்தியா ஆகியனவும் உள்ளன.

மன்னர் ஒன்பதாம் இராமாவின் தலைமையில் அரசியல்சட்ட முடியாட்சி ஆட்சியமைப்பு இங்கு நிலவுகிறது.

1946 இல் முடிசூடிய சக்கிரி வம்சத்தைச் சேர்ந்த ஒன்பதாம் இராமா மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.

தாய்லாந்து மன்னரே அந்நாட்டின் அரசுத் தலைவரும், இராணுவப் படைகளின் தலைவரும், பௌத்த மதத்தை மேனிலைப்படுத்துபவரும், அனைத்து நம்பிக்கைகளுக்கும் பாதுகாவலரும் ஆவார்.

மொத்தப் பரப்பளவின் அடிப்படையில் தாய்லாந்து 51ஆவது நாடு ஆகும்.

இதன் பரப்பளவு 513,000 km2 (198,000 sq mi) ஆகும்.

பேங்காக் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.

இதுவே தாய்லாந்தின் அரசியல், வணிக, தொழிற்துறை மற்றும் கலாசார மையமாகவும் விளங்குகிறது.

மக்கள்தொகையின் 75% தாய் இனத்தவரும், 14% சீனரும் 3% மலாய் இனத்தவரும் ஆவர்; ஏனையோர் மொன், கெமர், மற்றும் பல்வேறு மலைவாழ் இனங்களும் சிறுபான்மையினமாக உள்ளனர்.

நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி தாய் மொழியாகும்.

மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 95% மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

1985 முதல் 1996 வரை தாய்லாந்தின் பொருளாதாரத்தில் பெரும் ஏற்றம் காணப்பட்டது.

தற்போது இந்நாடு முக்கிய தொழில்வள நாடாகவும் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.

தாய் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தாய்லாந்தில் 2.2 மில்லியன் சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத இடம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர்.

வெள்ளையானைகளின் நாடு என்று தாய்லாந்து அழைக்கப்படுகிறது.