திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும்.

இந்நூல் மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது.

சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது.

இந்நூலுக்கு திருமந்திரர் திருமந்திர மாலை என்று பெயரிட்டுள்ளார்.

தமிழ் மூவாயிரம் என்றும் அழைக்கப்படுகிறது.

திருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது.

கலிவிருத்தம் என்ற யாப்பில் அமைந்த பாடல்களைக் கொண்டது.

இந்த உட்பிரிவானது தந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதனில் 232 அதிகாரங்கள், 3100 செய்யுட்கள் உள்ளன.

இதன் காலம் அறிய முடியாததாய் உள்ளது .

“இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி “என்ற அவரது பாடல் வரிகள் உலகின் முதல் மனிதர் அவராயும், முதல் சித்தராயும், தமிழுக்கு ஆசானாகவும இருந்திருக்கின்றார்.

மேலும் “அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடி நூறாயிரம் ” என்ற மற்றொரு பாடலால் அவர் எழுதியது பல கோடி பாடல்கள் என்பதும் நமக்கு கிடைத்தது மூன்றாயிரம் பாடல்கள் மட்டுமே என்பது ஆய்வாளர்களின் கருத்து.

மேலும் தமிழிலே உள்ள முதல் நூலான திருமந்திரம் முதல் திருமுறையாக வைக்கப் படாமல் பத்தாம் திருமுறையாக வைத்துள்ளதும் சந்தேகத்துக்கிடமாய் உள்ளது என்பர் ஆன்றோர்.

திருமந்திரத்தின் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள ‘கடவுள் வாழ்த்து‘ என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது;

ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,
நின்றனன் மூன்றினுள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரித்தனன், ஏழும்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே

திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை.

20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது.

இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.

எடுத்துக்காட்டுப் பாடல்கள்

அன்பு சிவமிர ண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாக அமர்ந்திருந்தாரே!

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து முன்றென்ப தாகுங்
கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே

ஆசிரியர் மற்றும் அவரது படைப்புகள்


பக்தி இலக்கியங்கள்

தேவாரம்

திருவாசகம்

திருமந்திரம்

திருவருட்பா

திருப்பாவை

திருவெம்பாவை

திருவிசைப்பா

திருப்பல்லாண்டு

கந்தர் அனுபூதி

இந்த புராணம்

பெரிய புராணம்

நாச்சியார் திருமொழி

ஆழ்வார் பாசுரங்கள்


பதினெண் மேல்கணக்கு நூல்கள்

பத்துப்பாட்டு


திருமுருகாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

பொருநராற்றுப்படை

முல்லைப்பாட்டு

மதுரைக்காஞ்சி

நெடுநல்வாடை

குறிஞ்சிப் பாட்டு

பட்டினப்பாலை

மலைபடுகடாம்


பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்

திருக்குறள்

நாலடியார்

நான்மணிக்கடிகை

இன்னாநாற்பது

இனியவை நாற்பது

கார் நாற்பது

களவழி நாற்பது

ஐந்திணை ஐம்பது

திணைமொழி ஐம்பது

ஐந்திணை எழுபது

திணைமாலை நூற்றைம்பது

திரிகடுகம்

ஆசாரக்கோவை

பழமொழி

சிறுபஞ்சமூலம்

முதுமொழிக் காஞ்சி

ஏலாதி

இன்னிலை


ஐம்பெருங்காப்பியங்கள்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

சீவக சிந்தாமணி

வளையாபதி

குண்டலகேசி

இலக்கண நூல்கள் மற்றும் உரைநூல்

அகத்தியம்

தொல்காப்பியம்

புறப்பொருள் வெண்பாமாலை

நன்னூல்

பன்னிரு பாட்டியல்

இறையனார் களவியல் உரை


வழிநூல்

கம்பராமாயணம்