தீட்டு என்கிறார்கள்.. இதன் உண்மையானஅர்த்தங்கள் என்பது என்ன..?

தீட்டு என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது.

இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம்.

தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது.

தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள்.

தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.

ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே!

அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.

தீட்டுடைய இந்த உடலை வைத்து,எப்படிக் கடவுளை வழிபட முடியும்?

சிந்தித்துப் பாருங்கள்.

இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு, இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள்.

அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.

தீட்டு என்பது வேறு… அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்!

இறைவன் இருக்கும் இடத்தில்இந்தத் தீட்டுகள் ஆகாது!

1. காமத் தீட்டு:

காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம்.

நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம்.

அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும். இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும்.

இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.

2. குரோதத் தீட்டு:

குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன.

சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள். சிலர் தூக்கில் இடப்படுவார்கள்.

கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை.

கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர், கோபம் எழும் பொழுது நம் உடலில்உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள்செத்து மடிகின்றன.

ஆயுளும் குறைந்து விடுகிறது.

கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள்.

இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர்.

குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.

3. லோபத் தீட்டு:

லோபம் என்பது சுயநலம், பிறரைப்பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர்பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநல வேகமே.

இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.

அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள் இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.

4. மதத் தீட்டு:

மதம் என்பது கர்வம் (ஆணவம்) ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது.

எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது.

தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது.

ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது.

இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர்.

அதைத் தீண்டாதே என்பர். கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.

5. மாற்சரியத் தீட்டு:

மாற்சரியம் என்பது பொறாமை.

பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது.

எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது.

எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது.

தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம்.

பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள்.

தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள்.

இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர்.

இதுதான் ஐந்தாவது தீட்டு.

இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள்.

இந்தத் தீட்டுக்களையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.

ஓம் நமசிவாய.


சமய குரவர்கள்

திருஞானசம்பந்தர்

திருநாவுக்கரசர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள்

மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்

சேக்கிழார்

திருமூலர்

அருணகிரிநாதர்

குமரகுருபரர்


12 ஆழ்வார்கள்

பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

பேயாழ்வார்

திருமழிசை ஆழ்வார்

நம்மாழ்வார்

மதுரகவி ஆழ்வார்

குழசேகராழ்வார்

பெரியாழ்வார்

ஆண்டாள் நாச்சியார்

தொண்டரடிப் பொடியாழ்வார்

திருப்பாணாழ்வார்

திருமங்கையாழ்வார்


சித்தர்கள்

திருமூலர்

இராமதேவர்

கும்பமுனி

இடைக்காடர்

தன்வந்திரி

வான்மீகி

கமலமுனி

போகநாதர்

குதம்பைச் சித்தர்

மச்சமுனி

கொங்கணர்

பதஞ்சலி

நந்திதேவர்

போதகுரு

பாம்பாட்டிச் சித்தர்

சட்டைமுனி

சுந்தரானந்த தேவர்

கோரக்கர்

அகப்பேய் சித்தர்

அழுகணிச் சித்தர்

ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்

சதோகநாதர்

இடைக்காட்டுச் சித்தர்

புண்ணாக்குச் சித்தர்

ஞானச்சித்தர்

மௌனச் சித்தர்

பாம்பாட்டிச் சித்தர்

கல்லுளி சித்தர்

கஞ்சமலைச் சித்தர்

நொண்டிச் சித்தர்

விளையாட்டுச் சித்தர்

பிரமானந்த சித்தர்

கடுவெளிச் சித்தர்

சங்கிலிச் சித்தர்

திரிகோணச்சித்தர்


வான்மீகர்

பதஞ்சலியார்

துர்வாசர்

ஊர்வசி

சூதமுனி,

வரரிஷி

வேதமுனி

கஞ்ச முனி

வியாசர்

கௌதமர்


காலாங்கி

கமலநாதர்

கலசநாதர்

யூகி

கருணானந்தர்

போகர்

சட்டைநாதர்

பதஞ்சலியார்

கோரக்கர்

பவணந்தி

புலிப்பாணி

அழுகணி

பாம்பாட்டி

இடைக்காட்டுச் சித்தர்

கௌசிகர்

வசிட்டர்

பிரம்மமுனி

வியாகர்

தன்வந்திரி

சட்டைமுனி

புண்ணாக்கீசர்

நந்தீசர்

சப்த ரிஷிகள்.

அகப்பேய்

கொங்கணவர்

மச்சமுனி

குருபாத நாதர்

பரத்துவாசர்

கூன் தண்ணீர்

கடுவெளி

ரோமரிஷி

காகபுசுண்டர்

பராசரர்

தேரையர்

புலத்தியர்

சுந்தரானந்தர்

திருமூலர்

கருவூரார்

சிவவாக்கியர்

தொழுகண்

பால சித்தர்

ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்

நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)

அஷ்ட வசுக்கள்

காரைக்கால் அம்மையார்



ஆலய அதிசயங்கள்

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்

மிக உயரமான விமானத்தை உடைய தமிழக கோயில்கள்

மரண தீட்டைப் பற்றிய பொது விதிமுறைகள்

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தில்’ என்னென்ன சேர்ப்பார்கள்?

பைரவர் வழிபாடு

தேங்காய் சகுணம்

விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்

அமாவாசையன்று வாசலில் ஏன் கோலம் போடக் கூடாது?

சிவ சுதந்திரம்

கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?

தர்மத்தின் மதிப்பு என்ன?

தீட்டு என்கிறார்கள் இதன் உண்மையான அர்த்தங்கள் என்பது என்ன..?

108 சித்தர்களின் பெயர்கள்

பல இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்

ஏழு சக்கரங்களும், விளக்கமும்

எந்த கடவுளை வணங்குவது

கோவிலில் செய்யக் கூடாதவை

எதை விட்டுவிட வேண்டும்?

அனுமனின் திருமணக்கோலம்

மகாளய பட்சம் என்றால் என்ன?

அன்னதானத்தின் சிறப்பை கர்ணன் உணர்ந்த மகாபாரதக் கதை

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் பொன்வரிகள்

பிராணாயாம விதிமுறைகள்

கோவில்களில் ஏன் புறாக்கள் வளர்க்கப்படுகின்றது?

விளக்கேற்றக் கூடாத எண்ணெய்கள்

சூட்சும சக்தி

274 சிவாலயங்களுக்கு செல்வதற்கான குறிப்புகளை கொண்டது இப்பதிவு

63 நாயன்மார்களின் வரலாற்றுச் சுருக்கம்

மகான் அகத்தியர் தன்னுடைய நூலில் சொன்ன மரணத்தைப்பற்றிய அபூர்வ ரகசியம்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்

ஆடி அமாவாசை



திருத்தலம்




விநாயகர்:



நாயன்மார்கள்