துணைக் குடியரசுத் தலைவர்



இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆவார்.

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் – இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும்.

துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார்.

எனினும் இவருக்கு மாநிலங்க‌ளவை ஓட்டெடுப்பில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை.

ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் ஓட்டுக்கள் சமநிலையில் இருக்கும் போது இவர் ஓட்டளிக்கலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டவிதி 63 ல் குறிப்பிட்டுள்ளபடி துணைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்படுகின்றார்.

குடியரசுத் தலைவருக்கு கோரப்படும் அனைத்துத் தகுதிகளும் இவருக்கும் கோரப்படும். இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம்.

குடியரசுத் தலைவர் எதிர்பாராத இறப்பின் நிமித்தம் அல்லது அவர் பதவிக்காலம் முடிவுற்ற நிலை அல்லது அவர் பணியிலிருந்து நீங்குதல் போன்ற காலங்களில் துணைக்குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவர் பதவியில் மீண்டும் புதியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரையில் பதவி வகிப்பார்.

ராஜ்ய சபையின் தலைவர் துணைக் குடியரசுத் தலைவர் ஆவார்.