1986, அக்டோபர், 20 – அன்று, திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு வ.உ.சிதம்பரார் பெயரால் தூத்துக்குடி என்ற புதிய மாவட்டம் உதயமானது.

கி.பி.7ம் நூற்றாண்டு 9ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் அரசில் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது. இந்நகரம் கி.பி 9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை சோழ மன்னனின் அரசாட்சியின் கீழ் இருந்தது.

தூத்துக்குடி (Thoothukudi அல்லது Tuticorin) தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநகரமும், தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும்.

2008, ஆகஸ்ட், 05 – அன்று, தமிழகத்தின் 10ஆவது தூத்துக்குடி மாநகராட்சியாக அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது.

தூத்துக்குடி வரலாற்று ரீதியில் பரதவர் இன மக்கள் மீன் பிடித்தலிலும் அதிகளவில் முத்து குளித்தும் வந்தனர். இன்றளவும் இம்மக்கள் சங்கு குளிக்கும் தொழில் செய்கின்றனர்.

இதை நாம் அகநானூறு 350 அதிகாரத்தில் காணலாம். இம்மாவட்டத்திற்கு முத்து நகர் பெயரும் உண்டு. தூத்துக்குடியில் அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் இந்நகரம் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது.

முதலாவதாக தூத்துக்குடிக்கு கிபி 1532ல் போர்ச்சுக்கீசியர்களும் அதனை தொடர்ந்து கி.பி 1658 ல் டச்சு நாட்டவரும் வந்தனர். கி.பி 1782 ல் டச்சு நாட்டவரிடமிருந்து தூத்துக்குடி நகரத்தினை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி கிழக்கு இந்திய கம்பெணியினை நிறுவினார்கள்.

20ம் நூண்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காகவும் ஆங்கிலேயினரின் கொடுமைக்கு எதிராகவும் போராடி தங்களது உடல் உயிர் உடமை அனைத்தையும் இழந்த உன்னத தலைவர்களாகிய வீரபாண்டிய கட்டப்பொம்மன், மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்கள்.

பழமை வாய்ந்த சிறிய துறைமுகமாகிய இத்துறைமுகத்தின் கலங்கரை விளக்கு கடல் வாணிபத்திற்கு மிகவும் உதவி உள்ளது கி.பி.1864ம் ஆண்டு மரத்தினால் செய்யப்பட்ட சிறிய கப்பல்களில் வாணிபம் செய்யப்பட்டது.

தற்போது இத்துறைமுகத்தின் வாயிலாக உப்பு, பருத்தி நூல், சென்னா இலைகள், பனைபொருட்கள், நார், உலர்மீன்கள் மற்றும் உள்நாட்டு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும் இத்துறைமுகத்தின் வாயிலாக நிலக்கரி, கொப்பரைகள், பருப்புவகைகள் மற்றும் தானியவகைகளும் இறக்குமதி செய்யப்படுகிறது.

இத்துறைமுகம் நாட்டின் 10வது பெரிய துறைமுகமாகும். இத்துறைமுகம் வருடத்திற்கு 1 மில்லியன் சரக்குகளை கையாள்கிறது என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இத்துறைமுகநகரம் மன்னார்வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. கடற்கரை கன்னியாகுமரி வரை தொடர்ந்து நாட்டின் எல்லையாகவும் அமைந்துள்ளது.

தூத்துக்குடியை சுற்றியுள்ள பகுதியில் மானாவாரி குளங்கள் அமைந்துள்ளது. நகரின் தென்பகுதி செம்மண் நிறைந்த பகுதியாகவும் சிவந்த அடுக்குபாறைகளாகவும் அதன் துகள்களாகவும் அமைந்துள்ளது.

இந்நகரம் மிதமான தட்பவெட்ப நிலையை கொண்ட பகுதியாகும். சிறய அளவிலான தீவுகளும் ஆபத்தான முனைகளையும் கொண்ட இவ்வளைகுடா பகுதி புயல் மழை போன்றவற்றிலிருந்து உள்நாட்டவரை பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளது.

தூத்துக்குடி தென்னிந்தியாவிலேயே மிக வேகமாக வளரும் தொழிற்சாலை நகரமாக வளர்ந்து வருகிறது. தொழில் நகரமாக வேகமான வளர்ச்சியையும் நகர்புற விரிவாக்கத்தையும் கருத்தில் கொண்டு நகர்புற வளர்ச்சி மற்றும் நகரவளர்ச்சி திட்ட துறை தூத்துக்குடி நகரை சுற்றியுள்ள 29 கிராமங்களை நகர்புற வளாச்சி திட்டத்தில் சேர்த்து நகரத்தின் வளர்ச்சியை முறையாக மேலாண்மை செய்து வருகிறது.

2018 ஆம் ஆண்டு, தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரக்காரர்கள் உள்ளே புகுந்துவிட்டனர் எனக் கூறி 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முத்து நகரம், துறைமுக நகரம் மற்றும் தமிழ்நாட்டின் நுழைவுவாயில் என்று தூத்துக்குடி அழைக்கப்படுகிறது.

சிவகளை அகழாய்வில் 3,000 ஆண்டுகள் பழமையான நெல்மணிகள் கண்டெடுப்பு


1905, செப்டம்பர், 27 – ஆம் தேதி தினத்தந்தி நாளிதழை தொடங்கிய சி.பா.ஆதித்தனார் தூத்தக்குடி மாவட்டத்தில் பிறந்தார்.

1907, ஜுன், 1 – அன்று வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் முதல் முதலாக எஸ்.எஸ்.காலியா என்ற சுதேசி கப்பலை வெற்றிகரமாக இயக்கினார்.

2022, ஜூன், 30 – தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் 3,200 ஆண்டுகள் பழமையான தங்கத்தால் ஆன காதணி கண்டெடுப்பு