நன்மை + திணை = நல் + திணை = நற்றிணை

எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்றது நற்றிணை.

இந்நூல் சங்ககாலப் புலவர் பலரால் பல்வேறு காலத்தில் பாடப்பெற்ற நானூறு அகவற்பாக்களின் தொகுப்பாகும்.

நற்றிணையில் உள்ள பாக்கள் ஒன்பதடிச் சிறுமையும் பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை.

அவை அகப்பொருள் பற்றிய பாடல்கள் எனினும் அவற்றுள் புறப்பொருள் செய்திகளும் தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

இத்தொகை நூலைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்.