1907, செப்டம்பர், 26 – அன்று நியூசிலாந்து, பிடிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்றது.

நியூசிலாந்து (New Zealand) என்பது பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும்.

இது வடக்குத் தீவு, மற்றும் தெற்குத் தீவு ஆகிய இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது.

நியூசிலாந்தின் மாவோரி மொழிப் பெயர் ஆவோதேயாரோவா (Aotearoa) என்பதாகும்.

இதற்கு நீளமான வெண்ணிற முகில் நிலம் என்று பொருள்.

குக் தீவுகள், நியுவே, தொக்கேலாவு ஆகியனவும் நியூசிலாந்தின் ஆட்சி எல்லைக்குள் அடங்கியுள்ளன.

புவியியல் அடிப்படையில் நியூசிலாந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகரம் – வெலிங்டன்

ஆட்சிமொழி – ஆங்கிலம்

அரசாங்கம் – நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியல் முடியாட்சி

பரப்பளவு – 2,68,680 சதுர கிலோ மீட்டர்

நாணயம் – நியூசிலாந்து டாலர் (NZD)

தொலைபேசி அழைப்புக்குறி +64

இணையக்குறி .nz

நியூசிலாந்து தாஸ்மான் கடலுக்குக் குறுக்காக ஆஸ்திரேலியா நாட்டுக்கு கிழக்கே 1,500 கிலோமீட்டர்களுக்கு (900 மைல்கள்) அப்பாலும், வடக்கே இதன் அண்மையிலுள்ளவை நியூ கலிடோனியா, பிஜி, தொங்கா ஆகிய பசிபிக் தீவுகளுக்குத் தெற்கே ஏறத்தாழ 1000 கிமீ தூரத்துக்கப்பாலும் அமைந்துள்ளது.

மனிதர் கடைசியாகக் குடியேறிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

இதன் நீண்டகாலத் தனிமையின் காரணமாக, நியூசிலாந்தில், பறவைகளை முக்கியமாகக் கொண்ட தனித்துவமான விலங்கினங்கள், மற்றும் பூஞ்சைத் தாவரங்களும் வளர்ச்சியடைந்துள்ளன.

இவற்றுள் பல இனங்கள் மனிதர்களும் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாலூட்டிகளும் நாட்டுக்குள் வந்தபின்னர் அழிந்துவிட்டன.

நியூசிலாந்தின் மாறுபட்ட இட அமைப்பியல் மற்றும் கூர்மையான மலை உச்சிகள் காரணமாக நிலங்களின் கண்டத்தட்டுப் பெயர்வு, மற்றும் எரிமலைக் குமுறல்கள் இங்கு அடிக்கடி நிகழ்கின்றன. நியூசிலாந்தின் தலைநகரம் வெலிங்டன் ஆகும்.

ஆக்லாந்து மக்கள் அதிகமாக வாழும் நகரமாகும்.

கிபி 1250-1300 களில் பொலினீசியர்கள் நியூசிலாந்தில் குடியேறி தனித்துவமான மாவோரி கலாசாரத்தைப் பேணி வந்தனர். 1

1642 ஆம் ஆண்டில் ஏபெல் டாஸ்மான் என்ற டச்சு நாடுகாண் பயணியே முதன் முதலாக நியூசிலாந்தைக் கண்ட ஐரோப்பியர் ஆவார்.

1840 இல் பிரித்தானிய அரசும் மவோரியரும் வைத்தாங்கு உடன்பாட்டை ஏற்படுத்தி நியூசிலாந்தை பிரித்தானியக் குடியேற்ற நாடாக்கினர்.

இன்றுள்ள மக்களில் பெரும்பான்மையானோர் ஐரோப்பிய வம்சாவழியினர் ஆவர்.

தாயக மாவோரி இனத்தவர் மிகப்பெரிய சிறுபான்மையினர்.

இவர்களுக்கு அடுத்ததாக ஆசியரும், பசிபிக் தீவு மக்களும் வாழ்கின்றனர்.

இதனால் நியூசிலாந்தின் கலாச்சாரம் முக்கியமாக மாவோரி மற்றும் ஆரம்ப கால ஐரோப்பிய கலாசாரங்களை மையப்படுத்தி உள்ளது.

அண்மைக் காலத்தில் உலகின் வேறு பகுதிகளில் இருந்து இங்கு குடியேற்றம் தொடங்கியதில் இருந்து பல்கலாச்சாரம் பரவி வருகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் அரசி என்ற வகையில் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தே நியூசிலாந்தின் நாட்டுத் தலைவராக உள்ளார்.

இவரது சார்பில் ஆளுநர் ஒருவர் நியூசிலாந்தில் உள்ளார்.

அரசிக்கு நடைமுறையில் எவ்வித அரசியல் அதிகாரமும் கிடையாது.

நாட்டின் அரசியல் அதிகாரம் மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்படும் ஓரவையைக் கொண்ட நாடாளுமன்றத்திடமே உள்ளது.

இதன் தலைவரான தலைமை அமைச்சரே அரசின் தலைவராக உள்ளார்.

திறந்த பொருளாதார அமைப்பைக் கொண்ட நியூசிலாந்தின் பொருளாதாரம் உலகில் கூடிய அளவு கட்டற்ற சந்தை முறையைக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரங்களில் ஒன்று.

நாடாளுமன்றத்தை விட நியூசிலாந்தில் 78 உள்ளூராட்சி அமைப்புகள் உள்ளன.

அத்துடன் நியூசிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் டோக்கெலாவ் (சார்பு மண்டலம்); குக் தீவுகள் மற்றும் நியுவே (சுயாட்சி அமைப்புடைய மாநிலங்கள்) ஆகியனவும், அன்டார்க்டிக்காவில் உள்ள ரொஸ் சார்பு மண்டலமும் உள்ளன.

நியூசிலாந்து ஐக்கிய நாடுகள் அவை, பொதுநலவாய நாடுகள், அன்சஸ், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, பசிபிக் தீவுகளின் ஒன்றியம், ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது.


உலகிலேயே முதன் முதலாக பெண்களுக்கு ஒட்டுரிமை அளித்த நாடு நியூசிலாந்து ஆகும்.


ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா