1581, ஜூலை, 26, அன்று ஹாப்ஸ்பர்க் (ஸ்பெயின்) பேரரசிடமிருந்து விடுதலை நெதர்லாந்து அடைந்தது.

1606 – ஆம் ஆண்டு, டச்சு நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய பயணிகள் ஆஸ்திரேலியா நாட்டில் முதன் முதலாக வந்து இறங்கினர்.

1642 – ஆம் ஆண்டு, ஏபெல் டாஸ்மான் என்ற டச்சு நாடுகாண் பயணியே முதன் முதலாக நியூசிலாந்தைக் கண்ட ஐரோப்பியர் ஆவார்.

1648, ஜனவரி, 30, அன்று நெதர்லாந்து அங்கீகாரம் பெற்றது.

1652 – ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவுக்கு, கேப் கடல்வழி கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி பின்னாளில் கேப் டவுன் என்று மாறிய புது காலணி நிலையத்தை அமைத்தது.

நெதர்லாந்தின் தலைநகரம் ஆம்ஸ்ட்ராம் ஆகும். இந்நாட்டின் ஆட்சி மொழி டச்சு.

இந்நாட்டின் நாணயம் யூரோ ஆகும்.

மொத்தப் பரப்பளவு – 41,865 சதுர கிலோ மீட்டர்.

தொலைபேசி இணைப்பு எண் +31

வலைதளக் குறியீடு .nl

நெதர்லாந்து (The Netherlands); டச்சு: Nederland) நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள ஒரு நாடு. இது வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது.

இதன் தீவுகள் சில கரிபியன் பகுதியில் உள்ளன. வடக்கிலும் மேற்கிலும் வடகடலும் தெற்கில் பெல்ஜியமும் கிழக்கில் ஜெர்மனியும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது பெல்ஜியம், ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் கடல்சார் எல்லைகளையும் கொண்டுள்ளது.

ஒற்றையாட்சி அடிப்படையில் அமைந்த இது ஒரு நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கொண்ட ஒரு நாடாகும்.

அரசாங்கத்தின் இருப்பிடம் ஹேக் நகரம். நெதர்லாந்து முழுமையும் சில வேளைகளில் ஒல்லாந்து என அழைக்கப்படுவது உண்டு. ஆனால், வடக்கு ஒல்லாந்தும், தெற்கு ஒல்லாந்தும், நெதர்லாந்தின் 12 மாகாணங்களில் இரண்டு மட்டுமே.

இந்த நாட்டில் உள்ள ராட்டர்டேம் துறைமுகமானது ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகம் ஆகும்.

புவியியல் அடிப்படையில் இது ஒரு தாழ்நிலப் பகுதி. இதன் 25% நிலப் பகுதி கடல் மட்டத்துக்குக் கீழ் அமைந்துள்ளதுடன், 21% மக்கள் அப்பகுதிகளில் வாழ்கின்றனர்.

அத்துடன் இதன் 50% நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டருக்கு உட்பட்ட உயரத்தில் அமைந்துள்ளது.

இந்தத் தன்மையே இதன் பெயருக்கும் காரணமாகியது. டச்சு மொழியிலும் வேறு பல ஐரோப்பிய மொழிகளிலும் இதன் பெயர் “தாழ்ந்த நாடு” என்னும் பொருள் கொண்டது.

கடல் மட்டத்துக்குக் கீழ் அமைந்த நிலப்பகுதிகளில் பெரும்பாலானவை மக்களில் நடவடிக்கைகளினால் ஏற்பட்டவை. குறிப்பாக, பல நூற்றாண்டுகளாக இப் பகுதியில் கட்டுப்பாடற்ற முறையில் இடம்பெற்ற முற்றா நிலக்கரி (peat) அகழ்வினால் இப்பகுதிகள் பல மீட்டர்கள் தாழ்ந்து போயின.

இது ஒரு மக்கள் நெருக்கம் மிகுந்த நாடு.

இந்நாடு இங்கு அமைந்துள்ள காற்றாலைகளுக்குப் புகழ்பெற்றது.ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா