நோபல் பரிசு



நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு.

மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு.

இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது.

முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும்.

பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.

பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.

இருப்பினும் நோபல் பரிசு தொடர்பான சர்ச்சைகளும் நடைபெற்றுள்ளது. குறிப்பாக அமைதிக்கான நோபல் பரிசு மகாத்மா காந்தி அவர்களுக்கு வழங்கப்படாதது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

அறிவியலுக்கான நோபல் பரிசினை முதன்முதலில் பெற்ற இந்தியர் சர்.சி.வி.இராமன் ஆவார். இயற்பியலில் இவர் கண்டறிந்த இராமன் விளைவிற்காக இப்பரிசு வழங்கப்பட்டது.

இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர் மேரி க்யூரி ஆவார்.


நோபல் பரிசு பெற்றவர்கள்

பெயர்ஆண்டுதுறை
மேரி க்யூரி1903இயற்பியல்
மேரி க்யூரி1911வேதியியல்
ரவீந்திரநாத் தாகூர்1913இலக்கியம்
சர்.சி.வி.ராமன்1930இயற்பியல்
ஹர்கோவிந்சிங்குராணா1968மருத்துவம்
அன்னை தெரேசா1979அமைதி
எஸ்.சந்திரசேகர்1983இயற்பியல்
அமர்தியாசென்1998பொருளாதாரவியல்
மொகம்மது எல்பரதேய் 2005அமைதி
வெங்கட்ராமன் ராமமூர்த்தி2009வேதியியல்
கைலாஷ் சத்தியமூர்த்தி2014அமைதி