னல முன்னும், ணள முன்னும் தநக்கள்

1. நிலைமொழி ஈற்றில் னகரமோ லகரமோ நின்று வருமொழி முதலில் தகரம் வரின் அது றகரமாக மாறும். நகரம் வரின் அது னகரமாக மாறும்.

எ.கா :

தகரம் றகரமாதல்,

  • பொன்+தீது = பொன்றீது
  • கல்+தீது = கற்றீது

நகரம் னகரமாதல்,

  • பொன்+நன்று = பொன்னன்று
  • கல்+நன்று = கன்னன்று

2. நிலைமொழி ஈற்றில் ணகரமோ, ளகரமோ நின்று வருமொழி முதலில் கரம் வரின் அது டகரமாகவும், நகரம் வரின் அது ணகரமாகவும் மாறும்.

எ.கா :

தகரம் டகரமாதல்,

  • மண்+தீது = மண்டீது
  • முள்+தீது = முட்டீது

நகரம் ணதரமாதல்,

  • கண்+நீர் = கண்ணீர்
  • முள்+நன்று = முண்ணன்று

விதி :

“னலமுன் றனவும் ணளமுன் டணவும்

ஆகும் தநக்கள் ஆயுங் காலே ”                நன்னூல் – 237

எழுத்துஎழுத்து


சொல்


புணர்ச்சி
பொது


அணி


இலக்கியம்
தமிழ் புலவர்கள்