சுமார் 190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் பெருங்கடல் தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.

1521 -ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, ஃபெர்டினான்ட் மேகலன் என்பவர், பசிபிக் பெருங்கடலுக்கு இப்பெயரை வைத்தார்.

இது, சுமார் 165.25 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பசிபிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ளன.

இக்கடல் பகுதியில் சுமார், 25,000 குட்டித் தீவுகள் உள்ளன.

ஆண்டுதோறும் இக்கடல் சுருங்கி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கடலின் ஆழமான பகுதியாக மெரீனா டிரெஞ்ச் உள்ளது. இப்பகுதி, சுமார், 36,201 அடி ஆழம் கொண்டது.

இப்பெருங்கடலுக்கு அடியில் சுமார் 40,000 மைல் நீளத்துக்கு மலைத்தொடர் ஒன்று அமைந்துள்ளது.

இப்பெருங்கடலின், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கரைகலளில் எண்ணெய் மற்றும் எரிவாயு அதிக அளவில் கிடைக்கிறது.

உலகில் உள்ள எரிமலைகளில் சுமார் 75% மலைகள் இப்பெருங்கடலில் அமைந்துள்ளன.