1592, ஜனவரி, 05 – அன்று, இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராகத் திகழ்ந்த ஷாஜகான் இன்றைய பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தார்.

1947, ஆகஸ்ட், 14 – அன்று பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரமடைந்தது.

1956, மார்ச், 23 – அன்று குடியரசானது.

தலைநகரம் – இஸ்லாமாபாத்

அரசாங்கம் – இஸ்லாமிய கூட்டாட்சிக் குடியரசு

ஆட்சி மொழி – உருது, ஆங்கிலம்

பரப்பு – 8,80, 254 ச.கி.மீ.

நாணயம் – பாகிஸ்தான் ரூபாய் (PKR)

தொலைபேசி அழைப்புக்குறி +92

இணையக்குறி .pk

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பிரதமர், இராஜீவ் காந்தி ஆவார்.

1965, ஆகஸ்ட், 05 – அன்று பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உள்ளுர் மக்கள் போல உடை அணிந்து எல்லையைக் கடந்து வந்து தாக்குதல் நடத்தியதால் இந்திய-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.

1965,செப்டம்பர் 23 ஆம் தேதி இந்திய-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது.

சிந்து நதியானது, பாகிஸ்தானின் மிக நீளமானதும் மற்றும் அந்நாட்டின் தேசிய நதியும் ஆகும்.

இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலமானது பாகிஸ்தானுடன் அதிக அளவு எலைலையை பகிர்ந்து கொள்கிறது.

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள அசோகரின் இரண்டு கல்வெட்டுக் கட்டளைகள் கரோஷ்டி எழுத்தில் உள்ளது.