பாக்டீரியா பற்றிய சில முக்கிய தகவல்கள்


பாக்டீரியா (Bacteria) என அழைக்கப்படுபவை நிலைக்கருவிலி பிரிவைச் சேர்ந்த நுண்ணுயிரிகளில் மிகப்பெரிய ஆட்களத்தில் உள்ள உயிரினங்கள் ஆகும்.

பொதுவாகச் சொல்வதென்றால் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் வகைகளில் ஒரு பிரிவுக்கு பாக்டிரியாக்கள் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது எனக் கூறலாம்.

பாக்டீரியாக்களே உலகில் மிகவும் அதிகமாக உள்ள உயிரினம் ஆகும். மண், நீர், புவியின் ஆழமான மேலோட்டுப் பகுதி, கரிமப் பொருட்கள், தாவரங்கள் விலங்குகளின் உடல்கள் என்று அனைத்து இடங்களிலும் வாழும்.

சில வகை பாக்டீரியாக்கள் உயிரிகளுக்கு உகந்ததல்லாத சூழல் எனக் கருதப்படும் வெந்நீரூற்றுக்கள், கதிரியக்க கழிவுகள் போன்றவற்றிலும் வாழும் தன்மை கொண்டனவாக உள்ளன.

இவை பிற உயிரினங்களுடன் கூட்டுயிரிகளாகவும் வாழும் திறனைக் கொண்டவையாக இருக்கின்றன.பாக்டீரியாக்களே உலகில் மிகவும் அதிகமாக உள்ள உயிரினம் ஆகும்.

மண், நீர், புவியின் ஆழமான மேலோட்டுப் பகுதி, கரிமப் பொருட்கள், தாவரங்கள் விலங்குகளின் உடல்கள் என்று அனைத்து இடங்களிலும் வாழும்.

சில வகை பாக்டீரியாக்கள் உயிரிகளுக்கு உகந்ததல்லாத சூழல் எனக் கருதப்படும் வெந்நீரூற்றுக்கள், கதிரியக்க கழிவுகள் போன்றவற்றிலும் வாழும் தன்மை கொண்டனவாக உள்ளன.

இவை பிற உயிரினங்களுடன் கூட்டுயிரிகளாகவும் வாழும் திறனைக் கொண்டவையாக இருக்கின்றன.

உலகில் முதன்முதலாக தோன்றிய உயிரினம் பாக்டீரியா ஆகும்.

ஹார்மோன்களே இல்லாத உயிரினம் ஆகும்.

காற்றில்லா சூழ்நிலையில் ஒரு சில எளிய தாவரங்களும் பாக்டீரியாக்களும் உணவுப் பொருளை முழுமையாக சிதைக்காமல் ஒரு பகுதியை மட்டும் சிதைத்து ஆற்றலைப் பெறும் முறை காற்றில்லா சுவாசம் ஆகும்.



Bacteria

பாக்டீரியாக்களால் தாவரங்களுக்கு உண்டாகும் சில நோய்கள்

ஓம்புயிர் தாவரத்தின் பெயர்நோயின் பெயர்நோய் உண்டாக்கும் பாக்டீரியத்தின் பெயர்
எலுமிச்சைசிட்ரஸ் கேன்சர்சேந்தோமோனாஸ் சிட்ரி
நெல்பாக்டீரிய வெப்புசேந்தோமோனஸ் ஓரைசோ
பருத்திகோண இலைப்புள்ளிசேந்தோமோனஸ் மால்வேஸியேரம்
பேரிதீ வெப்பு நோய்சூடோமோனாஸ் சோலனேஸீயேரம்
கேரட்மென் அலுகல்எர்வினியா கேரட்டோவோரா

பாக்டீரியாக்களால் விலங்குகளுக்கு உண்டாகும் சில நோய்கள்

ஓம்புயிர் விலங்கின் பெயர்நோயின் பெயர்நோய் உண்டாக்கும் பாக்டீரியத்தின் பெயர்
ஆடுகள்ஆந்தராக்ஸ்பேஸில்லஸ் ஆந்த்ராஸிஸ்
மாடுகள்புருசெல்லோஸிஸ்புருசேல்லா அபோர்டஸஸ்
செம்மறி ஆடுகள்புரூசெல்லோஸிஸ்புரோசெல்லா மெலிட்டென்ஸிஸ்

பாக்டீரியாக்களால் மனிதர்களுக்கு உண்டாகும் சில நோய்கள்

நோயின் பெயர்நோய் உண்டாக்கும் பாக்டீரியத்தின் பெயர்
காலராவிப்ரியோ காலரே
டைஃபாய்டு சால்மனெல்லா டைஃபி
ட்யூபர்குலோசிஸ்மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குலோசிஸ்

2022, ஜூன், 24 – கரீபியன் தீவுகளில் உள்ள சதுப்பு நிலங்களில் இருந்து மனிதனின் கண் இமை போல் இருக்கும் உலகின் மிகப்பெரிய பாக்டீரியாவை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 0.9 செ.மீ நீளமுள்ள இந்த பாக்டீரியாவை நுண்ணோக்கியின் உதவி இல்லாமல் மனிதனின் கண்களால் பார்க்க முடியும் எனவும் தகவல்.