வழிபடுவது எவ்வாறு..?? வரங்களை வரவைப்பது எப்படி..??
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்கு கிறோம்.
ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்கு வது சிறந்த பயனை அளிக்கும்.பிற தோஷங்க ளை நீக்கும் வலிமை பிரதோஷத்திற்கு உண்டு சிவனுக்கு உகந்த விஷேசங்களில் பிரதோஷமும் ஒன்று.
ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில்அதாவது மாலை 4.00-6.30 மணி வரை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
பிரதோஷம் பிறந்த கதை.
ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் தசமி திதி துவங்கி பாற்கடலைக் கடைந்து அமிர்தத் தை எடுத்தபோது கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி நாகம் கக்கிய கொடிய விஷத்தினால் தோன்றிய வெப்பத்தினால் அனைவரும் தாங்க முடியாத கஷ்டத்தை அனுபவித்தனர் அந்த கொடிய விஷத்தினால் ஏற்பட்ட வெப்ப த்தை தணிக்கவே, சிவபெருமான் அந்த விஷத்தை தானே உண்டு அனைவரையும் காப்பாற்றினார்.
சிவபெருமான் காப்பாற்றிய நிகழ்வு ஏகாதசி பதினோராம் நாள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.அதன் பின் மீண்டும் அனைவரும் பாற்கடலை கடையத் துவங்கி மறுநாள் அதாவது பன்னி ரண்டாம் நாளான துவாதசியன்று அமிர்தம் கிடைத்தது.
பின்னர் நடைபெற்ற பிற காட்சிக ளினால் தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடை க்க அதை உண்டவர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்த தேவர்கள் சிவபெருமானையே மறந்து விட்டார்கள்.
மறுநாள், 13 ஆம் நாள் திரியோதசியாகும்.
அன்று அனைவரையும் காப்பாற்ற சிவபெருமான் விஷத்தை உண்ட நிகழ்ச்சி அனைவருக்கும் நினைவிற்கு வர ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டனர்.
சிவபெருமானும் அவர்களது வேண்டுகோளை ஏற்று கொண்டு அனைவரையும் மன்னித்தப் பின் நந்தி தேவரின் கொம்புகளின் மத்தியில் நின்றபடி அழகிய நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடிய அந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுவது.
பிரதோஷ வழிபாட்டுப் பலன்கள்
அனைத்து நாட்களிலும் பலவிதமான பழங்க ளை நைவேத்தியமாகப் படைத்தும் மற்றும் மலர்களைக் கொண்டு பூசிப்பதும், சந்தனக் காப்புப் அல்லது சந்தன அபிஷேகம் போன்ற வை செய்வது வழக்கமானதுதான் என்றாலும் சில குறிப்பிட்ட திரவ்வியங்களினால் அபிஷே கம் செய்து ஆராதிப்பதும் குறிப்பிட்ட தினங்க ளில் வரும் பிரதோஷ தினங்களில் ஆலயத்து க்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்வதும் அதிக பலன் தரும் என்பது ஐதீகம்.
பிரதோஷத்தன்று சிவன் சன்னதியில் செய்ய வேண்டிய முறை:
எந்த சுவாமி சன்னதியையும் மூன்று முறை வலம் வந்து துதிக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.
அது போலவே பிரதோஷதன்று சிவன் சன்னதியை சோம சூத்திரப் பிரதட்சணம் என்ற முறையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அதன் பலனே மிகப் பெரியது. இதை சிலர் சோமசூத்தகப் பிரதட்சிணம் என்றும் கூறுவது உண்டு.அனைத்து சன்னதிகளிலும் சுவாமி மீது செய்யப்படும் அபிஷேக ஜலங்கள் வெளியேற தனி வழி அமைக்கப்பட்டு இருக்கும்.
அந்த தீர்த்தங்கள் அனைத்தும் சன்னதியின் வெளி யில் சன்னதியுடன் இணைந்தே உள்ளபடி ஒரு தொட்டிப் போல அமைந்துள்ள இடத்தில் சென்று விழும்.
அதை கோமுகம் என்பார்கள். பசுவின் முகத்தைப் போன்ற புனிதத் தன்மை யைக் கொண்டதே நீர் வெளியேறும் தொட்டி போன்ற அந்த அமைப் பாகும்.
பிரதோஷ காலத்தில் சிவன் சன்னதி யை வலம் வரும் காலத்தில் இந்த கோமுகத் தொட்டி முக்கியப் பங்கை வகிக்கின்றது.பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டிய
பிரதட்சிண முறை என்ன.?
ஆலயத்தில் நுழைந்து கணபதியை வணங்கி யப் பின், சிவனை நந்தி தேவர் கொம்புகளின் இடைவழியே பார்த்து வணங்க வேண்டும். அதன் பிறகு அந்த சன்னதியை சுற்றி வலம் வர வேண்டும்.
ஆனால் எப்போதும் செய்வது போல அந்த பிரதர்ஷணம் முழுமையாக இருக்கக் கூடாது.
வலம் வரும்போது கோமுகத்தின் அருகில் சென்றவுடன் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து மீண்டும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும்.
அதன் பின் மீண்டும் பிரதர்ஷணமாக சென்று கோமுகத்தின் அருகில் சென்றப் பின் மீண்டும் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து சிவனை தரிசிக்க வேண்டும்.
அப்போதும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும்.
இப்படியாக பிரதட்சிணம் செய்யும்போது ஒவ்வொரு முறையும் சண்டிகேஸ்வரர் சன்ன திக்கும் சென்று அவரை வணங்க வேண்டும்.
அவர் சன்னதியின் முன்னால் ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டு அல்லது மெல்லியதாக கையைத் தட்டி சப்தம் எழுப்பி விட்டு வர வேண்டும்.
இப்படியாக மூன்று முறையும் சன்னதியை சுற்றி முழு வலமும் வராமல், அரைப் பகுதி வலம் வந்து சிவபெருமானை நந்தியின் கொம்புகள் வழியே தரிசிக்க வேண்டும்.
இந்த பிரதர்ஷண முறையை பிரதோஷ தினத்தன்று மட்டுமே செய்ய வேண்டும்.
விரதம் கடைப்பிடிக்கும் முறை.
இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.
அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளை படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.
நலம்தரும் நந்தி
பிரதோஷ காலத்தில் பேசும் நந்திபேரருளை மாந்தர்க்கு வழங்கும் நந்தி வரலாறு படைத்து வரும் வல்ல நந்திவறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி.
கும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்திகுடங்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்திபொன்பொருளை வழங்கிடவே வந்த நந்திபுகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி.
ஈஸ்வர தியானம்
நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்பவாய குண சம்பவாய சிவ தாண்டவாய நம ஓம்..சிவாய நம ஓம் சிவாய நம:சிவாய நம ஓம் நமசிவாயஹர ஹர ஹர ஹர நமசிவாய சிவாய நம..ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம…
20 வகை பிரதோஷங்களும். அதன் வழிபாடு பலன்களும்
1.தினசரி பிரதோஷம்
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.
நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
2. பட்சப் பிரதோஷம்
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும்.
இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.
3. மாசப் பிரதோஷம்
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும்.
இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம்
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
5. பூரண பிரதோஷம்
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும்.
இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும்.
பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப் பிரதோஷம்
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும்.
இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7. தீபப் பிரதோஷம்
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும்.
இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும்.
இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
9. மகா பிரதோஷம்
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும்.
எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும்.
இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும்.
மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.
10. உத்தம மகா பிரதோஷம்
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும்.
சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும்.
இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11. ஏகாட்சர பிரதோஷம்
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள்.
பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம்
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.
அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
13. திரிகரண பிரதோஷம்
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம்.
இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும்.
பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
14. பிரம்மப் பிரதோஷம்
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம்.
இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சரப் பிரதோஷம்
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம்.
தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார்.
தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம்
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம்.
இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு.
இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’.
தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான்.
எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்ட திக் பிரதோஷம்
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவக்கிரகப் பிரதோஷம்
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம்.
இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம்
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.
சைவம் வளர்த்தோர்
சேக்கிழார்
திருமூலர்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
12 ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசை ஆழ்வார்
நம்மாழ்வார்
மதுரகவி ஆழ்வார்
குழசேகராழ்வார்
பெரியாழ்வார்
ஆண்டாள் நாச்சியார்
தொண்டரடிப் பொடியாழ்வார்
திருப்பாணாழ்வார்
திருமங்கையாழ்வார்
சித்தர்கள்
திருமூலர்
இராமதேவர்
கும்பமுனி
இடைக்காடர்
தன்வந்திரி
வான்மீகி
கமலமுனி
போகநாதர்
மச்சமுனி
கொங்கணர்
பதஞ்சலி
நந்திதேவர்
போதகுரு
பாம்பாட்டிச் சித்தர்
சட்டைமுனி
சுந்தரானந்த தேவர்
கோரக்கர்
அகப்பேய் சித்தர்
அழுகணிச் சித்தர்
ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
சதோகநாதர்
இடைக்காட்டுச் சித்தர்
புண்ணாக்குச் சித்தர்
ஞானச்சித்தர்
மௌனச் சித்தர்
பாம்பாட்டிச் சித்தர்
கல்லுளி சித்தர்
கஞ்சமலைச் சித்தர்
நொண்டிச் சித்தர்
விளையாட்டுச் சித்தர்
பிரமானந்த சித்தர்
கடுவெளிச் சித்தர்
சங்கிலிச் சித்தர்
திரிகோணச்சித்தர்
வான்மீகர்
பதஞ்சலியார்
துர்வாசர்
ஊர்வசி
சூதமுனி,
வரரிஷி
வேதமுனி
கஞ்ச முனி
வியாசர்
கௌதமர்
காலாங்கி
கமலநாதர்
கலசநாதர்
யூகி
கருணானந்தர்
சட்டைநாதர்
பதஞ்சலியார்
கோரக்கர்
பவணந்தி
புலிப்பாணி
அழுகணி
பாம்பாட்டி
இடைக்காட்டுச் சித்தர்
கௌசிகர்
வசிட்டர்
பிரம்மமுனி
வியாகர்
தன்வந்திரி
சட்டைமுனி
புண்ணாக்கீசர்
நந்தீசர்
சப்த ரிஷிகள்.
அகப்பேய்
கொங்கணவர்
மச்சமுனி
குருபாத நாதர்
பரத்துவாசர்
கூன் தண்ணீர்
கடுவெளி
ரோமரிஷி
காகபுசுண்டர்
பராசரர்
தேரையர்
புலத்தியர்
சுந்தரானந்தர்
திருமூலர்
கருவூரார்
சிவவாக்கியர்
தொழுகண்
பால சித்தர்
ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
அஷ்ட வசுக்கள்
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்
அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்
மிக உயரமான விமானத்தை உடைய தமிழக கோயில்கள்
மரண தீட்டைப் பற்றிய பொது விதிமுறைகள்
தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தில்’ என்னென்ன சேர்ப்பார்கள்?
விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்
அமாவாசையன்று வாசலில் ஏன் கோலம் போடக் கூடாது?
கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
தீட்டு என்கிறார்கள் இதன் உண்மையான அர்த்தங்கள் என்பது என்ன..?
அன்னதானத்தின் சிறப்பை கர்ணன் உணர்ந்த மகாபாரதக் கதை
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் பொன்வரிகள்
கோவில்களில் ஏன் புறாக்கள் வளர்க்கப்படுகின்றது?
274 சிவாலயங்களுக்கு செல்வதற்கான குறிப்புகளை கொண்டது இப்பதிவு
63 நாயன்மார்களின் வரலாற்றுச் சுருக்கம்
மகான் அகத்தியர் தன்னுடைய நூலில் சொன்ன மரணத்தைப்பற்றிய அபூர்வ ரகசியம்