1948, மார்ச், 04 – இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய யூனியனுடம் இணைக்கப்பட்டது.
1974, ஜனவரி, 14 – புதுக்கோட்டை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.
புதுக்கோட்டை (Pudukkottai), இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள புதுக்கோட்டை மாவட்டத் தலைமையிட நகரம் ஆகும்.
இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது.
பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர்.
இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது.
தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்) மார்ச்சு 3, 1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இங்கு முந்திரி மற்றும் கோடைக்கால பயிர்களும் விளைவிக்கபடுகின்றன.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் பிறந்த ஊர்.
இம்மாவட்டத்திலுள்ள விராலிமலையில் மயில்கள் சரணாலயம் அமைந்துள்ளது.
