1930, பிப்ரவரி, 18 – அன்று, கிளைட் டோம்போ என்பவரால் புளூட்டோ குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1915 – ஆம் ஆண்டு, இது பெருசிவல் லோவெல் என்பவரால் கணிக்கப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

புளூட்டோ ஆரம்பத்தில் சூரியனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது.

நெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைப்பர் பட்டையில் உள்ள பல பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோள் ஆகவும் புளூட்டாய்டு ஆகவும் வகைப்படுத்தப்பட்டது.

புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன.

கைப்பர் பட்டையில் உள்ள ஏனைய விண்பொருட்கள் போலவே புளூட்டோவும் பாறைகள், மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது.

புவியின் நிலவின் ஆறில் ஒரு மடங்கு நிறையையும், மூன்றில் ஒரு மடங்கு கனவளவையும் கொண்டுள்ளது.

இதன் விட்டம் சுமார் 2,379 கி.மீ ஆகும். இது அமெரிக்காவின் நீளத்தை விட குறைவானதாகும்.