பூட்டான் (Bhutan, இராச்சியம் (Kingdom of Bhutan) தெற்காசியாவில் இமய மலைச் சாரலின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள நிலத்திடை நாடாகும்.

இதன் எல்லைகளாக தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கே இந்தியாவும், வடக்கே திபெத்தும் அமைந்துள்ளன.

இந்தியாவின் சிக்கிம் மாநிலம் நேபாளம், பூட்டான் ஆகியவற்றைப் பிரிக்கிறது.

பூட்டான் மக்கள் தமது நாட்டை டிரக் யூல் (வெடிக்கும் டிராகனின் நிலம்) என அழைக்கின்றனர்.

திம்பு இதன் தலைநகரமாகும்.

பூட்டான் உலகில் மிகவும் ஒதுங்கிய நாடாக இருந்த போதிலும் அண்மைய அபிவிருத்திகளும், உலக நாடுகளுடனான நேரடி வானூர்தி சேவைகள், இணைய இணைப்புகள், போன்றவை வெளியுகத்துடனான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன.

மக்கள் தமது பழமையான பண்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.

2006 ஆம் ஆண்டில் பிசினஸ் வீக் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பூட்டான் ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும், உலகின் எட்டாவது மகிழ்ச்சியான நாடாகவும் தெரிவு செய்யப்பட்டது.

பூட்டானின் அரச சமயம் வச்சிராயண பௌத்தம் ஆகும்.

மக்கள் பெரும்பாலானோர் பௌத்தர்கள். ஏனையோர் இந்துக்கள். திம்பு இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.

பல நூற்றாண்டுகளாக நேரடி மன்னராட்சியில் இருந்த பூட்டான் முதலாவது மக்களாட்சித் தேர்தல்களை மார்ச் 2008 இல் நடத்தியது.

பூட்டான் ஐக்கிய நாடுகள், மற்றும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) ஆகிய அமைப்புகளில் உறுப்புரிமை பெற்றது.

உலகில் திரை அரங்குகளே இல்லாத ஒரே நாடு பூட்டான் ஆகும்.



ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா