பூ என்னும் பெயர் வருமொழி வல்லினத்தோடு புணரும் முறை:

பூ என்னும் பெயர் வருமொழியில் வல்லினம் வந்து புணரும்போது, பொதுவிதிப்படி வல்லினம் மிக்குப் புணரும் அன்றி, வருமொழி வல்லினத்திற்கு இனமான மெல்லினம் மிக்குப் புணரும்.

எ.கா பூ+தோட்டம் – பூத்‍தோட்டம்

பூ என்னும் நிலைமொழி முன் வருமொழி முதலில் வல்லினம் (தோ – த்+ஓ) வந்ததால், பொதுவிதிப்படி அவ்வல்லினம் மிக்குப் பூ+த்+தோட்டம் என்றானது.

எ.கா பூ+தோட்டம் – பூந்தோட்டம்

பூ என்னும் நிலைமொழி முன் வருமொழி முதலில் வல்லினம் (தோ – த்+ஓ) வந்ததால், இனமென்மையும் ‍தோன்றும் என்னும் விதிப்படி, அந்த வல்லினத்திற்கு (த்) இனமான ‘ந்’ என்னும் மெல்லினம் மிக்குப் புணர்ந்து பூ+ந்+தோட்டம் – பூந்தோட்டம் என்றானது.

‘மென்மையும்’ என்னும் உம்மையால் வன்மையும் தோன்றும் என்பது பெறப்படுகிறது.

பூ + செடி = பூச்செடி

விதி :

“பூப்பெயர் முன்இன மென்மையுந் தோன்றும் ”       நன்னூல் 200