பெரியம்மை (Smallpox), மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும்.
இது வரியோலா மேஜர் (Variola major) மற்றும் வரியோலா மைனர் (Variola minor) ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது.
இவற்றுள் வரியோலா மேசர் அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும்.
இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடுகின்றனர்.
வரியோலா மைனர் கிருமி தாக்கியவர்களுள் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே இறக்கின்றனர்.
உயிர் பிழைத்தவர்களில் பலரும், (ஒன்று அல்லது) இரண்டு கண்கள் குருடாவதுடன், நீங்காத தழும்புகளையும் பெறுகின்றனர்.
20ஆம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300-500 மில்லியன் மக்கள் இறந்தனர்.
1967ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் பெரியம்மை பாதிக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர்.
1796 ஆம் ஆண்டு, மே, 14 ஆம் நாள், எட்வர்ட் ஜென்னர், பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார்.
இந்தியாவில் செயல்படுத்தப்படும் நோய் தடுப்பூசி திட்டம்
மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள்
மனித நோய்கள் – தடுப்பு மற்றும் மருத்துவம்
வைட்டமின் குறைபாடும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்
எலுமிச்சையை விட அதன் தோலுக்கு பயன் அதிகம் ஏன் தெரியுமா?
40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்
மூலிகை செடிகளில் இருக்கும் சில சத்துக்கள்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?
உடல் அறிகுறி (Symptoms) – அதன் சந்தேகமும் பாதிப்புகளும்
பாம்புக்கடி மற்றும் பிற விஷக்கடிக்கான மருந்துகள்
சுக்குமல்லி காபி மருத்துவப் பயன்கள்
ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்
உங்கள் நலனுக்கானக் குறிப்புகள்
இஞ்சி கொண்டுள்ள மருத்துவ குணங்கள்
நமது உடலுக்குள் ஒரு மருத்துவர்