1. மகரஈற்றுச் சொற்கள் வருமொழியோடு புணரும்பொழுது இறுதி மகரம்கெட்டு உயிரீறு போல நின்று உயிர் முதன்மொழியோடு உடம்படு மெய் பெற்றுப் புணரும்.

எ.கா மரம்+அடி (மகரம் கெட்டு) மர+அடி

(உடம்படு மெய் பெற்று) மரவ்+அடி

“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவதியல்பே” விதிப்படி

மர(வ்+அ)டி = மரவடி என்று புணரும்.

  • மகரஈறுகெட்டு வருமொழி முதலில் உள்ள வல்லெழுத்து மிக்குப் புணரும்.

மரம்+கால் = ஈறு கெட்டு,

மர+கால் என்றாகிப் பின் வருமொழி முதலில் உள்ள ககரஒற்று

“இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்” எனும் விதிப்படி, மர+கால் = மரக்கால் என்று புணரும்.

  • மகரஈறு வருமொழி முதலிலுள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லினமாகத் திரிந்தும் புணரும்.

காலம்+கடந்தது = காலங்கடந்தது

மகரஈறு வருமொழி முதலிலுள்ள ககரத்திற்கு இனமான ஙகரமாகத் திரிந்து புணர்ந்தது.

மவ்வீ றொற்றழிந் துயிரீ றொப்பவும்

வன்மைக் கினமாகத் திரிபவும் ஆகும்”- நன்னூல் 219