மகாராஷ்டிரா1887 – ஆம் ஆண்டு, புனேயில் காகித தொழிற்சாலை நிறுவப்பட்டது.

1986, இந்தியாவின் முதல் காற்றாலை மின் உற்பத்தி இந்தியாவின் ஓகா (குஜராத்), இரத்தினகிரி (மகாராஷ்டிரா) மற்றும், தூத்துக்குடி (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் தொடங்கியது.

2021, செப்டம்பர், 20 – மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 5ஜி சோதனை ஓட்டத்தின்போது, விநாடிக்கு 3.7 ஜிகாபிட் என்ற சாதனை வேகம் எட்டப்பட்டதாக வோடஃபோன் ஐடியா நிறுவனம் கூறியுள்ளது.

2022, ஜூலை, 10 – மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகராக ராகுல் நர்வேகர் (45) தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், இந்தியாவின் அரசமைப்பு சார்ந்த ஒரு பதவியை வகிக்கும் இளம் வயது சபாநாயகர் ஆனார்.

2022, செப்டம்பர், 17 – பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத் தயாரிப்பான பச்சிளம் குழந்தைகளுக்கான பவுடர் உரிமத்தை மகாராஷ்ட்ரா உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ஐ.எஸ் 5339-2004 தர நிர்ணயத்திற்கு உட்பட்டு ஜான்சன் பவுடர் இல்லை; குழந்தைகளுக்கான PH பரிசோதனையிலும் போதிய தரமில்லை என தகவல்.


லோக் ஆயுக்தா முதன் முதலில் இம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது.

கோதாவரி ஆறானது, மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் திரிம்பாக் என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது.

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் மற்றும் மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் இந்தியாவின் முதல் கிசான் ரெயிலை, மகாராஷ்டிராவின் தேவலாலியில் இருந்து பீகாரின் தனபூர் ரயில் நிலையத்திற்கு சிறப்பு இணைப்பு பார்சல் ரயில் மூலம் வீடியோ இணைப்பு மூலம் கொடியேற்றினர்.

மாதுளை, வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களையும், கேப்சிகம், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளையும் கொண்டு செல்லும் இந்திய ரயில்வேயின் (ஐஆர்) முதல் பன்முகப் பொருட்கள் ரயில் இதுவாகும். இந்த ரயில் வாரந்தோறும் இயங்கும்.

இம்மாநிலத்திலுள்ள நாசிக் நகரமானது வைன் (Wine) தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.

அரபிக்கடலின், மேற்கு கடற்கரையில், JNPT மற்றும் மும்பை துறைமுகங்கள் அமைந்துள்ளன.