மக்களவை
மக்களவை (Lok Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இது மாநிலத் தொகுதிகளில் இருந்தும், ஒன்றியப் பிரதேச தொகுதிகளில் இருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் 2 நியமன உறுப்பினர்களையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும்.
இது இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்படுள்ளதன்படி வரையறுக்கப்பட்டதாகும்.
இந்த அவையில் அதிகபட்சமாக இரண்டு ஆங்கிலோ இந்தியர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ, குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலின் மூலம் நாட்டின் பதினாறாவது மக்களவை துவங்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான சார்பாளர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசரநிலைப் பிரகடன காலத்தின் போது இதன் செயல்பாடுகளை குறிப்பிட்ட காலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீட்டித்து முடக்கலாம்.
இத்திய மக்களவையின் முதல் சபாநாயகர் கணேஷ் வாசுதேவ் மாவ்லங்கர்.