மண்ணியிலாளர் உலகின் மண்ணினை, அதன் தன்மைகளைக் கொண்டு 12 வகைகளாகப் பிரிக்கின்றனர்.

இவ்வாறு அமைவதற்குக் காரணிகளாக மழை, வெப்பம், மற்றும் காற்றோட்டம் போன்றவைகள் இருக்கின்றன.

இக்காரணிகளால் மண்ணின் தன்மை மற்றும் இயல்புகளில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

மண் உருவாக எவ்வளவு காலம் ஆகும்?

காலநிலையைப் பொறுத்து மண் உருவாகிறது. மித வெப்பமண்டல காலநிலைப் பிரதேசங்களில் 1 செ.மீ மண் உருவாக சுமார் 200 முதல் 400 வருடங்கள் ஆகும்.

அயன மண்டல ஈரக் காலநிலைப் பகுதிகளில் மண் உருவாக சுமார் 200 வருடங்கள் ஆகும். நண்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ 3000 வருடங்கள் ஆகும்.