2020, மார்ச், 24 – அன்று, நாகப்பட்டினம் மாவட்டத்தின் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களைக் கொண்டு தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார்.
2020, ஏப்ரல், 07 – அன்று, புதிய மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
2020, ஜூலை, 12 – அன்று, இம்மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய சிறப்பு அதிகாரியாக ஆர். லலிதா, இஆப மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக என். ஸ்ரீநாதா இ.கா.ப. நியமிக்கப்பட்டுள்ளனர்.
2020, டிசம்பர், 28 – நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரித்து தமிழ்நாட்டின் 38 ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
2022, அக்டோபர், 29 – மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடியில் ரூ.24 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க மயிலாடுதுறை நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.
இதன் மாவட்ட நிர்வாகத் தலைமையிடமாக மயிலாடுதுறை உள்ளது.
பண்டைய நகரமான பூம்புகார் தற்பொழுது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது.
மயிலாடுதுறையில் குதம்பைச் சித்தர் சித்தியடைந்தார்.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து