1. ஆழம் பார்த்தல் – மனநிலை அறிதல்
 2. ஆறப்போடுதல் – நீட்டித்தல்
 3. ஒருகை பார்த்தல் – சண்டைக்குப் போதல்
 4. ஒருகாலில் நிற்றல் – பிடிவாதம் காட்டுதல்
 5. கச்சை கட்டிக் கொண்டு-  தீவிரம் காட்டுதல்
 6. கம்பி நீட்டுதல் – ஓடிப் போதல்
 7. கடை கட்டுதல் – செயலை நிறுத்தல்
 8. குட்டு வெளிப்படல் – உண்மை வெளியாதல்
 9. கயிறு திரித்தல் – பொய்ச் சொல்லிப் பரப்புதல்
 10. காது குத்துதல் – ஏமாற்றுதல்
 11. கடுக்காய் கொடுத்தல் – ஏமாற்றுதல்
 12. கை கொடுத்தல் – உதவி செய்தல்
 13. சாயம் வெளுத்துவிட்டது – உண்மை வெளிப்படுதல்
 14. தலை தப்பினால் போதும் – உயிர் தப்பித்தல்
 15. தலையிடு – குறுக்கிடுதல்
 16. தாளம் போடல் – மறுக்காமல் ஏற்றுக் கொள்ளல்
 17. நடுத்தெருவில் – ஆதரவில்லாமல் செய்தல்
 18. நீறு பூத்த நெருப்பு – உணர்ச்சி குன்றாமை
 19. நெல்லிக்காய் மூட்டை – ஒற்றுமை இல்லாமை
 20. பழுக்கப்போடு – காலம் தாழ்த்தல்
 21. பூசி மெழுகுதல் – மறைத்தல்  
 22. வாய்ப்பூட்டு – பேசக்கூடாது என தடைவிதித்தல்
 23. வாலாட்டுதல் – மீறி நடத்தல்
 24. வெட்ட வெளிச்சம் – எல்லோருக்கும் தெரிதல்
 25. முகத்தில் கரிபூசுதல் – தாழ்வு/இழிவுப்படுத்துதல்
 26. முழுக்குப் போடுதல் – கைவிடுதல்