மீத்தேன் (Methane) என்பது CH4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இதை மெத்தேன், கொள்ளிவாய் பிசாசு, சாணவாயு போன்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள்.

கார்பன் அணு ஒன்றும் நான்கு ஐதரசன் அணுக்களும் சேர்ந்து மீத்தேன் வாயு உருவாகிறது. இயற்கை வாயுவின் பெரும்பகுதி மீத்தேன் வாயுவாகும். தனிம வரிசை அட்டவனையின் 14 ஆவது குழுவைச் சேர்ந்த ஓர் ஐதரைடாகவும் ஓர் எளிய ஆல்கேனாகவும் மீத்தேன் கருதப்படுகிறது. ஒப்பீட்டளவில் மீத்தேன் பூமியில் அதிகமாகக் காணப்படுவதால் ஓர் எரிபொருளாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இருப்பினும் வாயுவாக இருப்பதால் அதை சாதாரண வெப்ப மற்றும் அழுத்த நிபந்தனைகளில் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாகிறது.

பூமிக்கு அடியிலும் கடலுக்கு அடியிலும் இயற்கை மீத்தேன் கிடைக்கிறது. இந்த இயற்கை மீத்தேன் தரைப்பகுதியை அல்லது வளி மண்டலத்தை அடையும்போது வளிமண்டல மீத்தேன் என்ற பெயரைப் பெறுகிறது. சூரிய மண்டலத்தின் அனைத்து கிரகங்களிலும் மற்றும் பெரிய நிலவுகள் பெரும்பாலானவற்றிலும் மீத்தேன் இருப்பதாக நம்பப்படுகிறது.

மாட்டுச்சாணத்திலுருந்து மீத்தேன் வாயு தயாரிக்கப்படுகிறது.