மெக்சிக்கோ (México, “மெஃகிக்கோ”) வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு கூட்டாட்சி அரசமைப்புக் குடியரசு நாடாகும்.

தலைநகரம் – மெக்சிகோ நகர்ம

ஆட்சி மொழி – நிர்ணயிக்கவில்லை

அரசாங்கம் – கூட்டாட்சி குடியரசு

பரப்பளவு – 19,72,550 ச.கி.மீ

நாணயம் – மெக்சிகோ பீசோ (MXN)

தொலைபேசி அழைப்புக்கிறி +52

இணையக்குறி .mx

முறைப்படி இது ஐக்கிய மெக்சிக்க நாடுகள் என அழைக்கப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது.

தெற்கிலும், மேற்கிலும் பசிபிக் பெருங்கடல் உள்ளது. தென்கிழக்கு எல்லையில் குவாத்தமாலா, பெலிசே ஆகிய நாடுகளும் கரிபியக் கடலும் உள்ளன.

கிழக்கு எல்லையில் மெக்சிக்கோ குடா அமைந்துள்ளது.

ஏறத்தாழ இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர் (760,000 சதுர மைல்களுக்கு மேல்) பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ, பரப்பளவு அடிப்படையில் அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஐந்தாவது பெரிய நாடும், உலகில் 13 ஆவது பெரிய விடுதலை பெற்ற நாடும் ஆகும்.

113 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் 11 ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இது விளங்குவதுடன், உலகில் அதிக மக்கள் ஸ்பானிஷ் மொழி பேசும் நாடும் இதுவாகும்.

இதன் தலைநகரம் மெக்சிகோ நகரம்.

மெக்சிக்கோவின் கூட்டாட்சி அமைப்பில் 31 மாநிலங்கள் இணைந்துள்ளன.

இவற்றோடு தலைநகரம் கூட்டாட்சி மாவட்டமாக இருக்கிறது.

கொலம்பசுக்கு முற்பட்ட மெக்சிக்கோவில் பல பண்பாடுகள் முதிர்ச்சியுற்று, ஒல்மெக், தோல்ட்டெக், தியோத்திகுவாக்கான், சப்போட்டெக், மாயா, அசுட்டெக் போன்ற நாகரீகங்களாக உயர்நிலை அடைந்தன.

1521 ஆம் ஆண்டில், மெக்சிக்கோவின் பகுதிகளை ஸ்பெயின் கைப்பற்றித் தனது தளமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானில் இருந்து குடியேற்றங்களை நிறுவியது.

1810, செப்டம்பர், 16 – மெக்சிகோ தன்னை ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்ததாக அறிவித்தது.

1821, செப்டம்பர், 24 – இக் குடியேற்ற நாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆட்சிப்பகுதிகள் மெக்சிக்கோ ஆக மாறின.

விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில், பொருளாதார உறுதியின்மை, மெக்சிக்கோ-அமெரிக்கப் போர், அமெரிக்காவிடம் ஆட்சிப்பகுதிகள் இழப்பு, உள்நாட்டுப் போர், இரண்டு பேரரசுகள் உருவாக்கம், ஒரு உள்ளூர் சர்வாதிகாரம் போன்றவற்றுக்கு மெக்சிக்கோ முகம் கொடுக்கவேண்டி இருந்தது.

சர்வாதிகாரம் 1910 ஆம் ஆண்டின் மெக்சிக்கப் புரட்சிக்கு வித்திட்டது.

இதைத் தொடர்ந்து 1917 ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் உருவானதுடன், தற்போதய அரசியல் முறைமையும் நடைமுறைக்கு வந்தது.

சூலை 2000 ஆவது ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் முதல் முறையாக எதிக் கட்சியான நிறுவனப் புரட்சிக் கட்சி ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றியது.

மெக்சிகோ அதிபராக அக் கட்சியைச் சேர்ந்த என்ரிக் பீனா நீட்டோ பதவி ஏற்றுள்ளார்.

மெக்சிக்கோ உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று என்பதுடன், இது ஒரு பிரதேச வல்லரசும், நடுத்தர வல்லரசும் ஆகும்.

அத்துடன், மெக்சிக்கோவே இலத்தீன் அமெரிக்க நாடுகளுள், பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பின் முதலாவது உறுப்பு நாடு ஆகும்.

இது, 1994 ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது.

மெக்சிக்கோ ஒரு மேல்-நடுத்தர வருமானமுள்ள நாடாக உலக வங்கியால் கணிக்கப்படுகிறது.

இது புதுத் தொழில்மய நாடாக இருப்பதுடன், வளர்ந்துவரும் ஆற்றல் வாய்ந்த நாடாகவும் உள்ளது.

மெக்சிக்கோ 13 ஆவது பெரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 11 ஆவது பெரிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது.

இந்நாட்டின் பொருளாதாரம் அதன் வட அமெரிக்கச் சுதந்திர வணிக ஒப்பந்தக் கூட்டாளிகளின் பொருளாதாரங்களுடன், சிறப்பாக ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்துடன், வலுவாகப் பிணைந்துள்ளது.

நாட்டிலுள்ள மொத்த யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களங்களின் எண்ணிக்கையின் அடைப்படையில் மெக்சிக்கோ உலகில் ஆறாவது இடத்திலும், அமெரிக்கக் கண்டத்தில் முதலாவது இடத்திலும் உள்ளது.

இங்கே மொத்தம் 31 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன.

2007 ஆம் ஆண்டில் மெக்சிக்கோவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை உலகில் 10 ஆவது பெரியது. அவ்வாண்டில் 21.4 மில்லியன் பயணிகள் வந்தனர்.

2006 ஆம் ஆண்டிலிருந்து, மெக்சிக்கோ, போதைப்பொருள் போரின் நடுவே இருந்து வருகிறது. இதனால், 60,000 பேர்வரை இறந்துள்ளனர்.

7 உலக அதிசயங்களுல் ஒன்றான சிக்சென் இட்சா, மெக்சிகோவில் உள்ளது.



ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா