1656 இல் நிறுவப்பட்ட ஒரு தனியார் வங்கியிலிருந்து தோன்றியதுதான் உலகின் முதல் மைய வங்கியான ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி.

1864 ஆம ஆண்டு, வங்கிக் கலையின் அடிப்படையில் பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி இங்கிலாந்து வங்கியாகும். (Bank of England)

1881, ஜனவரி, 01 – அன்று, மணி ஆர்டர் அனுப்பும் முறை தொடங்கப்பட்டது.

1897 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி பணத்தை வெளியிடுவதற்கான முழு உரிமையைப் பெற்றது.

1999, ஜனவரி, 01 – அன்று யூரோ நாணயம் (ஐரோப்பா) அறிமுகமானது.

2022, டிசம்பர், 22 – கத்தாரில் நடந்த உலகக் கோப்பை வெற்றியை குறிக்கும் வகையில் அர்ஜென்டினாவின் மத்திய வங்கி, லியோனல் மெஸ்ஸியின் முகத்தை 1,000 பெசோ வங்கி தாள்களில் அச்சடிக்க திட்டமிட்டுள்ளது. அர்ஜென்டினாவின் கரன்சி, “அர்ஜென்டினா பெசோ” என அழைக்கப்படுகிறது.

2022, டிசம்பர், 26 – ரூ.3,250 கோடி ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் தூத்தை கைது செய்தது சி.பி.ஐ.


இந்திய வங்கிகளின் வரலாறு

1770 ஆம் ஆண்டு, வெள்ளையர்கள் ஆட்சியில் நிறுவப்பட்ட ஹிந்துஸ்தான் வங்கி (Bank of Hindustan) இந்தியாவின் முதல் வங்கி ஆகும்.

1894 ஆம் ஆண்டு, முதன் முதலாக இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்ட வங்கி – பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகும்.

இந்தியாவில் உள்ள வங்கிகளின் அமைப்பு பிரசிடென்சி வங்கிகளால் கட்டுப்படுத்தப்பட்டும், ஆதிக்கம் செலுத்தப்பட்டும் வந்தது.

அக்காலகட்டத்தில் மூன்று பிரசிடென்சி வங்கிகள் இருந்தன.

  1. வங்காள வங்கி (Bank of Bengal) – 1809
  2. மும்பை வங்கி (Bank of Bombay) – 1840
  3. சென்னை வங்கி (Ban of Madras) – 1843

இவ்வங்கிகள் பிரசிடென்சி வங்கிகள் என்று அழைக்கப்பட்டன.

1921 ஆம் ஆண்டு பிரசிடென்சி வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியன் இம்பீரியல் வங்கி (Imperial Bank of India) உருவாக்கப்பட்டது.

1934 இல், டாக்டர் அம்பேத்கரின் ‘பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்’ (The Problem of the Rupee and its solution) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில்தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம், உருவாக்கப்பட்டது.

1935 ஆம் ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது. அப்போது அதன் முதலீடு 5 கோடி ஆகும்.

1955, ஜூலை, 01 – இந்தியன் இம்பீரியல் வங்கி (Imperial Bank of India) மாற்றப்பட்டு இந்திய ஸ்டேட் வங்கி (State Bank of India) உருவாக்கப்பட்டது, பின்னர் தேசியமயமாக்கப்பட்டது.

1964 – ஆம் ஆண்டு, இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI) தொடங்கப்பட்டது.

1969 – ஆம் ஆண்டு, 14 வணிக வங்கிகள் இந்திய நாட்டுடைமையாக்கப்பட்டது.

1980 – ஆம் ஆண்டு, 6 வணிக வங்கிகள் இந்திய நாட்டுடைமையாக்கப்பட்டது.

1982 ஆம் ஆண்டு – தேசிய விவசாய கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD – National Bank for Agricultural and Rural Development) துவங்கப்பட்டது.

2020, செப்டம்பர், 19 – இந்திய வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

2021, பிப்ரவரி, 05 – தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், 110 விதியின் கீழ் 12,110 கோடி ரூபாய் கூட்டிறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்தார்.

2022, அக்டோபர், 26 – அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்புநிதி வட்டி விகிதத்தை 7.1% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.


வணிக வங்கிகள்

வணிக வங்கிகள் மக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்று, பேரளவில் உற்பத்தி செய்வேர், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களிக்கு கடனை அளிக்கும் ஒரு நிதி அமைப்பு ஆகும். நீர்மத்தன்மையை தக்கவைக்கும் பொருட்டு வணிக வங்கிகள் பெரும்பாலும் நீண்ட கால கடன்களை அளிப்பதில்லை

வணிக வங்கிகளின் பணிகள்

வணிக வங்கிகள் இலாப நோக்கம் உடையவை. அதனால் அவைகள் வைப்பபுகளைப் பெற்று முதலீட்டுக்கான கடனை அளிக்கின்றன.


இந்திய ரிசர்வ் வங்கிக்கு பத்தாயிரம் (10,000) ரூபாய் நோட்டுகள் வரை அச்சடிக்க அதிகாரம் உள்ளது.

இந்திய ரூபாய் நோட்டிற்கான காகிதங்கள் மத்தியப் பிரதேசத்திலுள்ள ஹோஷங்காபாத் (Hoshangabad) என்னும் இடத்தில் தயாரிக்கப்படுகின்றன.

நாணயம்

இந்தியாவில் 1 ரூபாய் நாணயத்தை தயாரிக்க சராசரியாக 1 ரூபாய் 11 காசுகள் செய்யப்படுகிறது.

இந்தியாவில் நாணயம் Security Printing Minting Corporation of India Ltd (SPMCIL) என்ற அமைப்பால் அச்சிடப்படுகிறது.

இதற்கான அச்சகங்கள் நாடு முழுவதும் 4 இடங்களில் அமைந்துள்ளது.

  1. மும்பை
  2. கொல்கத்தா
  3. ஐதராபாத்
  4. நொய்டா

ஐதராபாத்தில் அச்சிடப்படும் நாணயங்களில் ஆண்டுக்குக் கீழே நட்சத்திரச் சின்னம் இருக்கும்.

மும்பையில் அச்சிடப்படும் நாணயங்களில் ஆண்டுக்கு கீழே வைர சின்னம் இருக்கும்.

நொய்டாவில் அச்சிடப்படும் நாணயங்களில் ஆண்டுக்கு கீழே வட்ட வடிவம் இருக்கும்.

கொல்கத்தாவில் அச்சிடப்படும் நாணயங்களில் ஆண்டுக்கு கீழே எந்த குறியீடும் இருக்காது.