கி.பி 19 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும், நீதிபதிகளும் இப்பகுதியை நிர்வகித்தனர்.

1910 – இல் நிர்வாக வசதிக்காக மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1948 – ஆம் ஆண்டு, இந்தியா விடுதலை அடைந்த பிறகு, ஜமீன்கள் அழிக்கப்பட்டன.

1985, மார்ச், 08 – அன்று அரசு அறிவிக்கை, அரசாணை (பல்வகை) எண் 347 நாள் 08.03.1985 – இன்படி இராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

மாவட்டம் பிரிக்கப்பட்ட போது காமாரஜர் மாவட்டம் என்று பெயர் வைக்கப்பட்டது.

1997 – ஆம் ஆண்டு, பின்னர், காமராஜர் மாவட்டமானது, விருதுநகர் மாவட்டம் என்று மாற்றப்பட்டது.

இம்மாவட்டம் அருப்புக்கோட்டை, சிவகாசி மற்றும் சாத்தூர் என 3 கோட்டங்களாகவும், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, இராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், திருச்சுழி, விருதுநகர், வெம்பக்கோட்டை மற்றும் வத்திராயிருப்பு என 10 வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் (Virudhunagar), தமிழ்நாட்டிலுள்ள, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம் மற்றும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும்.

விருதுநகரின் பழைய பெயர் விருதுப்பட்டி ஆகும்.

இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன.

வியாபார நகரம் என்று அழைக்கப்படுகிறது.

உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது.

நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.

இங்கிருந்து தொடர்வண்டி மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வூரின் சூலக்கரை பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நகரில் தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான காமராசர் பிறந்தார்.

விருதுநகர் கெளசிக நதியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது.

அதிக ஆப்செட் அச்சகங்களைக் கொண்ட இரண்டாவது நகரமாக சிவகாசி விளங்குகிறது.

ஶ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரமே தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது.

பருத்தி நகரம் என்று அழைக்கப்படும் ஊர் இராஜபாளையம் ஆகும்.

இங்குள்ள இராஜபாளையம் நாய் மிகவும் பிரபலமானது.

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் தான் இந்தியாவின் 90 சதவீத பட்டாசுகள் தயாரிக்கின்றன.

2021, அக்டோபர், 22 – அன்று, சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.அணைகள்


ஆறுகள்