விழுப்புரம் (Vizhuppuram) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும், ஒரு ‘தேர்வு நிலை நகராட்சி’ ஆகும். இதுவே விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது.

1993 ஆம் ஆண்டில், முந்தைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என உருவாக்கப்பட்டு, பின்னர் ‘விழுப்புரம்’ என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1993, செப்டம்பர், 30 – கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக முன்பு விழுப்புரம் மாவட்டம் இருந்தது. பின்னர் கடலூரில் இருந்து பிளவுபட்டது, ஒரு தனி மாவட்டமாக மாறியது.

இந்நகரம், திருச்சி – சென்னை சாலையை இணைக்கும் தேசியநெடுஞ்சாலை எண் 45ன் மற்றும் புதுச்சேரி – திருவண்ணாமலை – வேலூர் – மங்களூரு சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 234 இன் நடுவே அமைந்துள்ளது.

விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது. இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது; மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்(பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது.

விழுப்புரத்தின் முக்கிய வருமானம் விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆகும்.

மாவட்டத் தலைநகர் எனும் தகுதி, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை அடங்கிய பெருந்திட்ட வளாகம், ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடங்கள், பிரம்மாண்ட பேருந்து நிலையம், விரிவுபடுத்தப்பட்ட இரயில் சந்திப்பு, புறவழிச்சாலை, அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என முன்னேற்றமடைந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தின் வாகனப்பதிவு எணி – TN-32

செஞ்சிக்கோட்டை மற்றும் கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரம் மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களாகும்.

விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழா வருடந்தோறும் சித்திரைத் திங்கள் பௌர்ணமி நாளன்று நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற திருவிழா ஆகும்.

முதலாம் மகேந்திரவர்மன் மூலம் முதன்முதலில் உருவாக்கப்பட்ட மண்டகப்பட்டு குடைவரைக் கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.

2019, நவம்பர், 26 – தமிழ்நாட்டின் 34 ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.



அணைகள்


ஆறுகள்