வெண்மைப் புரட்சி என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஆகும்.

இதன் முக்கிய நோக்கம் புதிய மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி அதிக பால் உற்பத்தியைப் பெருக்குவதாகும்.

தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர்.

வர்கீஸ் குரியன் (26, நவம்பர், 1921 – 9, செப்டம்பர், 2012) இதை நிறுவினார். இதனால் இவர் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

இக்கழகம் உலகத்திலேயே மிகப் பெரிய பால் உற்பத்தி திட்டம் ஒன்றை வெள்ளை நடவடிக்கை (en:Operation Flood) என்ற பெயரில் உருவாக்கியது.