ரிச்சர்டு கூலி வெல்லஸ்லி (Richard Colley Wesley, 1st Marquess Wellesley) (20 சூன் 1760 – 26 செப்டம்பர் 1842) அயர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியங்களின் அரசியல்வாதியும், காலனித்துவ நிர்வாகியும் ஆவார்.

வெல்லஸ்லி 1798 முதல் 1805 முடிய பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராகவும்.

1809 முதல் 1812 முடிய ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும்,

இறுதியாக 1821 முதல் 1828 முடிய அயர்லாந்தின் தலைமை ஆளுநராகவும் பணியாற்றியவர்.

இவரும் இவரது சகோதரரும் சேர்ந்து இந்தியாவை ஆண்ட ஏழே ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் பரப்பை இரு மடங்காக்கினார். அது வரை காரன் வாலீஸ் போன்றவர்கள் கடைபிடித்து வந்த தலையிடா கொள்கையினை புறந்தள்ளிவிட்டு, அற்ப காரணங்களுக்கும் தலையிடலாம் என்ற புதிய கொள்கையை உருவாக்கி அதன் படி நடந்தார் . இவரது நாடு பிடிக்கும் ஆதிக்க கொள்கைகளை இங்கிலாந்தின் ஆதிக்க குழுவினர் ஆதரிக்காமல் அவரை இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்க எண்ணினர்.இதற்கு முன்னரே வெல்லெஸ்லி தாமே கவர்னர் ஜெனரல் பதவியை துறந்தார்

தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட, பிரான்சு கம்பெனியிடம் திப்பு சுல்தான், ஒப்பந்தம் செய்து கொண்டதை அறிந்த வெல்லஸ்லி, 1799ல் ஆங்கிலேயப் படைகளை அனுப்பி முதலில் திப்புசுல்தானைப் போரில் கொன்று பின்னர் ஸ்ரீரங்கப்பட்டணத்தைப் கைப்பற்றினார். பின்னர் நடந்த வந்தவாசி போரில் ஆங்கிலேயர்கள், பிரஞ்சுப் படைகளையும், ஆற்காடு நவாப் படைகளையும் வென்று தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களை கைப்பற்றினர்.

1803ல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் வென்ற ஆங்கிலேயர்கள், மராத்தியப் பேரரசின் கட்டக், பலாசோர், மேற்கு மிட்னாபூர் மற்றும் கிழக்கு மிட்னாபூர் மாவட்டப் பகுதிகளை கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் கைப்பற்றியது.

30 திசம்பர் 1803இல் செய்து கொண்ட வசாய் ஒப்பந்தப்படி, குவாலியரின் தௌலத் சிந்தியா, குர்குவான், ரோத்தக், ஆக்ரா, புந்தேல்கண்ட், பரூச், அகமதாபாத் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியிடம் இழந்தது.

24 திசம்பர் 1805இல் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இந்தூர் மன்னர் யஷ்வந்த்ராவ் ஹோல்கர், கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆண்டுதோறும் கப்பத் தொகை செலுத்திக் கொண்டு, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்குட்பட்டு, தன்னுடைய அரசை தக்க வைத்துக் கொண்டார்.

இவர் துணைப்படை திட்டத்தை கொண்டுவந்தார்.

கல்கத்தாவில் வில்லியம் கோட்டை கல்லூரியை நிறுவினார். இந்திய-பிரித்தானியாவுக்குமிடையே இருந்த வர்த்த பிணக்குகளை தீர்த்து வைத்தார்.

அயோத்தி பகுதியிலிருந்து வணிகர்களை வெளியேற்றியதற்காக, இந்தியத் தலைமை ஆளுநர் ரிச்சர்டு வெல்லஸ்லிக்கு எதிராக ஜேம்ஸ் பால் எனும் நாளுடாளுமன்ற உறுப்பினர், 1808ல் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் 31 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது.

சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)