வைரஸ் (virus) என்பது ஒரு தொற்றுநோய்க் கிருமியாகும்.

இது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கப்படுகிறது.

மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக இவை காணப்படுகின்றன.

விலங்குகள் மற்றும் தாவரங்கள் முதல் பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் வரை அனைத்து வகையான வாழ்க்கை வடிவங்களையும் இந்தத் வைரஸ்கள் பாதிக்கின்றன.

இவை தாம் வாழும் ஓம்புயிர்களின் உயிரணுக்களில் மட்டுமே தம்மைப் பெருக்கிக்கொண்டு இனப்பெருக்கம் அடைகின்றன.

வைரஸ்களிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான நுண்ணுறுப்பு கட்டமைப்பு இல்லாததாலும், அதன் காரணமாக, அவற்றால் தாமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது என்பதாலும், இவை உயிரற்றவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இன்னொரு உயிரினத்தின் உயிரணுக்களைத் தாக்கி, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி இவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன.

அதாவது இவை வேறொரு உயிரினத்திற்கு வெளிப்புறத்தில் இருக்கும் வரை ஓர் உயிரற்ற பொருளாகவே (inert) இருக்கும், ஆனால் தக்கவோர் உயிரினத்தின் உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மையைப் பெறுகிறது.

வைரசுகளை ஒரு சிலர் ஓர் உயிரினமாகக் கருதுகின்றனர்.

ஏனென்றால் அவை மரபணு மூலப்பொருட்களை எடுத்துச்செல்கின்றன, ஏதோ ஒரு முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன மற்றும் இயற்கைத் தேர்வு மூலம் உருவாகின்றன.

இருப்பினும் பொதுவாக உயிரினம் என்று எண்ணப்படுவதற்கு ஆதாரமான உயிரணுக் கட்டமைப்பு போன்ற முக்கிய பண்புகளை இவை பெற்றிருக்கவில்லை.

உயிரினங்கள் என்பதற்கான சில பண்புகளை கொண்டிருந்தாலும் அனைத்து குணங்களும் இல்லாததால், வைரசுகள் வாழ்க்கை விளிம்பு உயிரினங்கள் மற்றும் பிரதிபலிப்புகள் என விவரிக்கப்படுகின்றன.

சில நுண்ணியலாளர்கள் வைரஸ்களை ஒரு நுண்ணுயிர் என அழைத்தபோதிலும், அவை உயிரற்றவை என்ற ஒரு கருத்து இருப்பதனாலும், வேறு உயிரினங்களில் நோயை ஏற்படுத்துவதனாலும், வேறு சிலர் இதனை நோய்க் காரணி என்றே குறிப்பிடுகின்றனர்.

வைரஸ் என்ற சொல் பொதுவாக மெய்க்கருவுயிரியைத் தாக்கும் துகள்களைக் குறிப்பதாக இருக்கிறது.

நிலைக்கருவிலிகளைத் தாக்கும் துகள்கள் அல்லது வைரசு நுண்ணுயிர் தின்னி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

1892 – ஆம் ஆண்டு, புகையிலையைப் பாதித்த பாக்டீரியா அல்லாத நோய்க்காரணியைப் (வைரஸ்) பற்றி திமித்ரி இவனோவ்சுகியின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது.

1898 ஆம் ஆண்டில் மார்டினசு பிகிரிங்க் புகையிலை மொசைக் வைரசைக் கண்டுபிடித்தார்.

சுமார் 6,000 வைரசு இனங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

இவற்றோடு மில்லியன் கணக்கில் வைரசு இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.

பூமியிலுள்ள ஒவ்வொரு சூழல் மண்டலத்திலும் வைரஸ்கள் காணப்படுகின்றன.

மேலும் மிக அதிகமான உயிரியல் வகைகளைக் கொண்ட உயிரினமாகவும் வைரஸ் அறியப்படுகிறது.

வைரஸ்கள் பற்றிய ஆய்வு வைரசுவியல் என்று அழைக்கப்படுகிறது,

நுண்ணுயிரியலின் துணைப் பிரிவாகவும் இதைக் கருதுகிறார்கள்.

வைரசுத் தொற்று மனிதர்களிலும் விலங்குகளிலும் தாவர வகைகளிலும் நோயை உண்டாக்க வல்லது.

மனிதர்களிலும் விலங்குகளிலும் பொதுவாக இவை நோயெதிர்ப்பு அமைப்பால் அழிக்கப்படுகின்றன.

மேலும் தொற்று ஏற்பட்ட உயிரியானது சிலசமயம் வாழ்நாள் முழுதும் அந்தக் குறிப்பட்ட வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்புத் திறனைப் பெறுகிறது.

நுண்ணியிர் எதிர்ப்பிகள் வைரசுகளுக்கு எதிராகச் செயலாற்றுவது இல்லை.

எனினும் வைரசு எதிர்ப்பு மருந்தினை உயிரைக் கொல்லும் தன்மையுள்ள நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தலாம்.

தடுப்பூசிகள் சில வகைத் தொற்றுகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை வாழ்நாள் முழுதும் அளிக்கின்றன.

2019– – ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள ஊகான் நகர நுண்ணுயில் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது.

2022, பிப்ரவரி, 11 – HIV Virus கிருமியைக் கண்டறிந்த பிரான்ஸ் விஞ்ஞானியான லுக் மான்டோக்னியர் உடல்நலக் குறைவால் அவருடைய 89 ஆவது வயதில் காலமானார்.









தாவரவியல்


மனித உடல் பாகங்கள்