வரலாறு சுருக்கம்:

கேரளத்தின் மறுமலர்ச்சித் தந்தை எனப் போற்றப்பட்டவரும் சிறந்த கல்வியாளருமான ஸ்ரீ நாராயண குரு 1856 வருடம் ஆகஸ்ட் 20 அன்று கேரள மாநிலம் செம்பழஞ்சி என்ற சிற்றூரில் தீண்டத்தகாதவர்கள் என புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்தார்.

பிறந்த ஊரிலேயே கல்வி கற்றார். அப்போதே அய்யாவு ஆசான் என்ற ஹடயோகியிடம் யோகம் கற்றார். ஆன்மிகத்தில் நாட்டம் பிறந்தது.23-வது வயதில் ஊரைவிட்டு வெளியேறி, தமிழ்நாட்டுக்கு வந்து துறவு பூண்டார்.

வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், அறுவகை மந்திரங்கள், பவுத்த, சமண மரபுகள், மூவகை வேதாந்தங்கள், இந்திய, வெளிநாட்டு தத்துவங்கள் ஆகியவற்றை கற்று நிபுணத்துவம் பெற்றார்.

1888-ல் அருவிக்கரை என்ற சிற்றூரில் குருகுலம் நிறுவினார். ஏழை, அநாதைக் குழந்தைகளுக்குப் பல இடங்களில் பள்ளிகளை நிறுவினார். அவர்களுக்கு சமஸ்கிருதம், யோகா கற்றுத் தந்தார்.

திருச்சூர், கண்ணூர், தலச்சேரி, கோழிக்கோடு, மங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் இவரது மேற்பார்வையில் கோயில்கள் கட்டப்பட்டன. நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான சீடர்கள் இவரை நாடி வந்தனர்.

தன் சீடர்களை ஒன்று சேர்த்து ‘தர்ம சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். 1913-ல் அத்வைத ஆசிரமம் தொடங்கினார். இது ‘ஓம் சோதர்யம் சர்வத்ர’ (உலகளாவிய சகோதரத்துவம்) கோட்பாட்டைப் பின்பற்றியது.

ஆன்மிகவாதி, சமூக சீர்திருத்தவாதி, சொற்பொழிவாளர், கல்வியாளர் என்பதோடு நல்ல எழுத்தாளராகவும் மிளிர்ந்தார். 1897-ல் மலையாளத்தில் இவர் இயற்றிய ‘ஆத்மோபதேச சதகம்’ சிறந்த இலக்கியமாகவும், இவரது தலைசிறந்த தத்துவ நூலாகவும் போற்றப்பட்டது.

  • ‘சுப்ரமணிய சதகம்’,
  • ‘ஜாதி நிர்ணயம்’
  • ‘தோத்திரப்பாடல்கள்’
  • ‘தரிசன மாலா’
  • ‘வேதாந்த சூத்திரம்’
  • ‘தர்மம்’
  • ‘தேவாரப் பதிகங்கள்’

உள்ளிட்ட நூல்களைப் படைத்தார்.

இவரது சீர்திருத்த கொள்கைகளின் விளைவாக உருவானதுதான் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபை. மகாத்மா காந்தி இவரை ‘அவதார புருஷர்’ எனப் போற்றினார்.

பாரதியார் இவருடைய சமூக சீர்திருத்தக் கொள்கைகளையும், சமஸ்கிருத படைப்பு களையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அனைவரும் அறிவை அடைய வேண்டும் என்றும் அதற்கு எந்தக் குறுக்கு வழிகளும் கிடையாது என்றும் இவர் கூறுவார்.

அனைத்தையும் கற்றுத் தேர்ந்த பின்னர் தனக்கென ஒரு நோக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றார். இவரது தத்துவங்கள், கோட்பாடுகள் குறித்து இவர் படைத்த பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டன. இவரது தத்துவங்கள், கோட்பாடுகள், கொள்கைகள் குறித்து கேரளாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும், வேறு சில பல்கலைக்கழகங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பல மாணவர்கள் முனைவர் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டமும் பெற்றுள்ளனர். ‘அனைத்தும் ஒன்றே’ என்ற கோட்பாட்டை உருவாக்கினார். ‘இரண்டாம் புத்தர்’, ‘இந்திய சமூகச் சீர்திருத்தவாதி’, ‘ஆன்மிகத்தில் பல புதுமைகளைக் கொண்டு வந்தவர்’ என எல்லோராலும் போற்றப்பட்டார்.

சிறந்த இலக்கியப் படைப்பாளி, தத்துவஞானி என்றெல்லாம் போற்றப்பட்டவருமான ஸ்ரீ நாராயண குரு 1928-ம் ஆண்டு தனது 72-வது வயதில் செப்டம்பர் மாதம் 20ஆம் நாள் அன்று சிவகிரி மடத்தில் மகா சமாதி அடைந்தார்.

இவரது நினைவாக இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது. இவரது பிறந்த நாள், மகா சமாதி அடைந்த நாள் இரண்டுமே கேரளாவில் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


சமய குரவர்கள்

திருஞானசம்பந்தர்

திருநாவுக்கரசர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள்

மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்

சேக்கிழார்

திருமூலர்

அருணகிரிநாதர்

குமரகுருபரர்


12 ஆழ்வார்கள்

பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

பேயாழ்வார்

திருமழிசை ஆழ்வார்

நம்மாழ்வார்

மதுரகவி ஆழ்வார்

குழசேகராழ்வார்

பெரியாழ்வார்

ஆண்டாள் நாச்சியார்

தொண்டரடிப் பொடியாழ்வார்

திருப்பாணாழ்வார்

திருமங்கையாழ்வார்


சித்தர்கள்

திருமூலர்

இராமதேவர்

கும்பமுனி

இடைக்காடர்

தன்வந்திரி

வான்மீகி

கமலமுனி

போகநாதர்

குதம்பைச் சித்தர்

மச்சமுனி

கொங்கணர்

பதஞ்சலி

நந்திதேவர்

போதகுரு

பாம்பாட்டிச் சித்தர்

சட்டைமுனி

சுந்தரானந்த தேவர்

கோரக்கர்

அகப்பேய் சித்தர்

அழுகணிச் சித்தர்

ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்

சதோகநாதர்

இடைக்காட்டுச் சித்தர்

புண்ணாக்குச் சித்தர்

ஞானச்சித்தர்

மௌனச் சித்தர்

பாம்பாட்டிச் சித்தர்

கல்லுளி சித்தர்

கஞ்சமலைச் சித்தர்

நொண்டிச் சித்தர்

விளையாட்டுச் சித்தர்

பிரமானந்த சித்தர்

கடுவெளிச் சித்தர்

சங்கிலிச் சித்தர்

திரிகோணச்சித்தர்


வான்மீகர்

பதஞ்சலியார்

துர்வாசர்

ஊர்வசி

சூதமுனி,

வரரிஷி

வேதமுனி

கஞ்ச முனி

வியாசர்

கௌதமர்


காலாங்கி

கமலநாதர்

கலசநாதர்

யூகி

கருணானந்தர்

போகர்

சட்டைநாதர்

பதஞ்சலியார்

கோரக்கர்

பவணந்தி

புலிப்பாணி

அழுகணி

பாம்பாட்டி

இடைக்காட்டுச் சித்தர்

கௌசிகர்

வசிட்டர்

பிரம்மமுனி

வியாகர்

தன்வந்திரி

சட்டைமுனி

புண்ணாக்கீசர்

நந்தீசர்

சப்த ரிஷிகள்.

அகப்பேய்

கொங்கணவர்

மச்சமுனி

குருபாத நாதர்

பரத்துவாசர்

கூன் தண்ணீர்

கடுவெளி

ரோமரிஷி

காகபுசுண்டர்

பராசரர்

தேரையர்

புலத்தியர்

சுந்தரானந்தர்

திருமூலர்

கருவூரார்

சிவவாக்கியர்

தொழுகண்

பால சித்தர்

ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்

நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)

அஷ்ட வசுக்கள்

காரைக்கால் அம்மையார்ஆலய அதிசயங்கள்

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்

மிக உயரமான விமானத்தை உடைய தமிழக கோயில்கள்

மரண தீட்டைப் பற்றிய பொது விதிமுறைகள்

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தில்’ என்னென்ன சேர்ப்பார்கள்?

பைரவர் வழிபாடு

தேங்காய் சகுணம்

விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்

அமாவாசையன்று வாசலில் ஏன் கோலம் போடக் கூடாது?

சிவ சுதந்திரம்

கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?

தர்மத்தின் மதிப்பு என்ன?

தீட்டு என்கிறார்கள் இதன் உண்மையான அர்த்தங்கள் என்பது என்ன..?

108 சித்தர்களின் பெயர்கள்

பல இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்

ஏழு சக்கரங்களும், விளக்கமும்

எந்த கடவுளை வணங்குவது

கோவிலில் செய்யக் கூடாதவை

எதை விட்டுவிட வேண்டும்?

அனுமனின் திருமணக்கோலம்

மகாளய பட்சம் என்றால் என்ன?

அன்னதானத்தின் சிறப்பை கர்ணன் உணர்ந்த மகாபாரதக் கதை

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் பொன்வரிகள்

பிராணாயாம விதிமுறைகள்

கோவில்களில் ஏன் புறாக்கள் வளர்க்கப்படுகின்றது?

விளக்கேற்றக் கூடாத எண்ணெய்கள்

சூட்சும சக்தி

274 சிவாலயங்களுக்கு செல்வதற்கான குறிப்புகளை கொண்டது இப்பதிவு

63 நாயன்மார்களின் வரலாற்றுச் சுருக்கம்

மகான் அகத்தியர் தன்னுடைய நூலில் சொன்ன மரணத்தைப்பற்றிய அபூர்வ ரகசியம்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்

ஆடி அமாவாசைதிருத்தலம்
விநாயகர்:நாயன்மார்கள்