ஹீலியம் (Helium) அல்லது பரிதியம் அல்லது எல்லியம் என்பது He என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட தனிமமாகும்.

நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற, நச்சுத்தன்மையற்ற, கூடிய அளவில் வேதி வினையில் ஈடுபடாத ஒரு வளிமமுமாகும்.

இத்தனிமம் (மூலகம்) தனிம அட்டவணையில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இதன் உருகுநிலையும் கொதிநிலையும் எல்லாத் தனிமங்களை விடவும் குறைவானதாகும்.

இதன் அணு எண் 2. இதுவே அண்டத்தில் மிகுந்து காணப்படும் தனிமங்களில் இரண்டாவது ஆகும்.

இதுவே நீரியத்திற்கு அடுத்து எளிய அமைப்புக் கொண்ட தனிமமும் ஆகும்.

பூமியின் கடல் மட்டத்தில் காற்றுமண்டலத்தில் ஈலியம் 6ஆவதாக, நைதரசன், ஒட்சிசன், ஆர்கான், காபனீரொட்சைட்டு, நியானுக்கு அடுத்ததாகச் செறிவுற்றுள்ளது.

இதன் செழுமை மில்லியனில் 5.2 பங்குகள் ஆகும். பூமியில் அரிதாகக் கிடைத்தாலும் அண்டப் பெருவெளியில் நீரியத்திற்கு அடுத்து மிகுதியாக இருப்பது ஈலியமாகும்.

இதன் பங்கு 7%. நீரியமும் ஹீலியமும் சேர்ந்து அண்டப் பெருவெளியில் 99.9%ஆக உள்ளது.

எந்த தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் ஹீலியம் ஆகும்.