இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியான சர் ஹம்ப்ரி டேவி என்பார் மக்னீசியம் ஆக்சைடு என்ற என்ற வெள்ளை மக்னீசியாவை மின்னார் பகுப்பிற்கு உட்படுத்தி ஒரு புதிய தனிமத்தைப் பிரித்தெடுத்தார். இதற்கு மக்னீசியம் என்ற பெயரையும் சூட்டினார்.
நெப்போலியன் போர்த்துக்கலைக் கைப்பற்றிக்கொண்டபோது, பிரேசிலில் போர்த்துக்கீசக் குடியேற்றவாதப் பேரரசின் தலைநகரம் லிசுப்பனிலிருந்து இரியோ டி செனீரோவுக்கு மாற்றப்பட்டபோது குடியேற்றவாதப் பிணைப்பு அறுந்துவிட்டது.