கி.பி. 1819ஜனவரி, 29 – அன்று, சர் தாமஸ் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் என்பவர் தீபகற்ப மலேசியாவின் பெருநிலப் பகுதியில் தரை இறங்கினார். இந்தப் பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் சார்பில் வணிக நிலையம் ஒன்றை அமைக்க விரும்பினார். இதுவே பின்னாளில் சிங்கப்பூர் நாடானது.

பிப்ரவரி, 6 – அன்று, தேதி ஜொகூர் சுல்தானகத்தின் மன்னராக இருந்த சுல்தான் உசேன் ஷா (Hussein Shah of Johor) என்பவருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் வணிக நிலையம் ஒன்றையும்; குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக் கொண்டது.

வேதாந்த சாத்திரங்களின் சாரத்தை ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் இராஜாராம் மோகன் ராய் வெளியிட்டார்.

பிரிட்டன் அதிகாரியான ஜான் ஸ்மித் என்பவர், எதேச்சையாக அஜந்தா குகைகளைக் கண்டறிந்து உலகிற்கு வெளிப்படுத்தினார்.