அக்டோபர், 07 – அன்று, அணு அமைப்பைப் பற்றிய ஆராய்ச்சிகளின் முனுனோடியாகத் திகழ்ந்த நீல்ஸ் ஹென்றிக் டேவிட் போர், டென்மார்க் நாட்டிலுள்ள கோப்பன்ஹேகனில் பிறந்தார்.
ஓய்வு பெற்ற ஆங்கிலேய அதிகாரியான ஆலன் ஆக்டோவியன் ஹியூம் என்பவரின் ஆலோசனையின் பேரில் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் 1885 டிசம்பர், 28 இல் நடந்த கூட்டத்தில் உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
பம்பாய் மாகாண சங்கம் தொடங்கப்பட்டது.