மே, 17 முதல் தொலைத்தொடர்பில் ஒரு இணைவை ஏற்படுத்தும் சர்வதேச தொலைத்தொடர்பு மற்றும் சமூக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அக்டோபர், 9 – ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தபால் ஒன்றியத்தின் மாநாடு நடைபெற்றது. அப்போது உலக தபால் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் உலக அஞ்சல் தினத்தை, கொண்டாட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
புக்கர் பரிசு, மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
குடியரசுத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுப்பட்டது. இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட இந்திரா காந்தி அவர்கள் தலைமையிலான அரசு தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.
உலகின் முதல் சூரிய ஒளி மின்சக்தி நிலையம் பிரான்ஸில் நிறுவப்பட்டது.
320 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடன் இந்தியாவின் முதல் அணுமின் நிலையம், மும்பைக்கு அருகில் உள்ள தாராப்பூரில் நிறுவப்பட்டது. பின்னர் இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டாவிற்கு அருகிலுள்ள (100 மெகா வாட்), இரவத் பட்டா (335 மெகா வாட்) , என்னுமிடங்களில் அணுமின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
லிபியாவில், முவாம்மர் அல்-கடாபி ஓர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
14 வணிக வங்கிகள் இந்திய நாட்டுடைமையாக்கப்பட்டது.