ஜனவரி, 12 –நைஜீரியாவின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

ஏப்ரல், 22 – ஆம் தேதி, புவியை பாதுகாக்க 2 கோடி பேர் கலந்துகொண்ட பேரணியை கேலார்டு நெல்சன் என்பவர் நடத்தினார். இதுவே உலக புவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

அக்டோபர், 24 – அன்று, சிலி நாட்டின் முதல் மார்க்சிய சிந்தனை கொண்ட சால்வடார் அலெண்டி (Salvador Allende), ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூன் – மாதம், மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவிக்கப்பட்டது.

சென்னையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.

பெரியார் அவர்கள் உண்மை என்ற தமிழ் பத்திரிக்கையை தொடங்கி நடத்தினார்.

மூன்றாம் உலகத்தமிழ் மாநாடுபிரான்ஸ் – பாரீஸ்

சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதம மந்திரியாக இரண்டாவது முறையாக, 1970 – 1977 தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெண்மைப் புரட்சி என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஆகும்.