ஏப்ரல், 01 – அன்று, முதல் அதிகார பூர்வமாக ஈரான், இஸ்லாமிய குடியரசு நாடானது.

மே, 4 – மார்கரெட் தட்சர் (Margaret Thatcher) இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார்.

செப்டம்பர், 17 – அன்று கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.

இந்திய அரசால் ஊரக இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புப் பயிற்சி (TRYSEM) தொடங்கப்பட்டது.

அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விருந்தை மறுத்த அவர் அதற்காகும் $192,000 நிதியை இந்தியாவின் ஏழைகளுக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

விஜயலெட்சுமி பண்டிட் அவர்கள் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். மேலும் The Scope of Happiness: A Personal Memoir என்ற நூலை எழுதினார்.